Aavin Green Magic Plus - தமிழக பால் கூட்டுறவு உற்பத்தி மையங்கள் மற்றும் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் பால் உற்பத்தி நிறுவனம் தான் தமிழகத்தின் நம்பர் 1 பால் உற்பத்தி மையமாக விளங்கி வருகிறது. 1958 யில் ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 66 வருடங்களாக தமிழகத்தில் இயங்கி வருகிறது, ஆவின் நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 15 மில்லியன் லிட்டர்கள் பாலை சந்தைப்படுத்தி வருகிறது.
கிட்டதட்ட தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமாக தினசரி வாடிக்கையாளர்களைன் கொண்டு இயங்கி வருகிறது, வருடத்திற்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வரும் ஆவின் நிறுவனம் தொடர்ந்து நிறுவனத்தை அரசின் கீழ் விரிவு படுத்தி வருகிறது, பால், தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம் என பல தயாரிப்புகளிலும் வெற்றிகரமாக ஆவின் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆவின் தற்போது செறிவூட்டப்பட்ட புதிய ஆவின் க்ரீன் மேஜிக் + என்ற பால் வகையை அறிமுகப்படுத்த இருக்கிறது, இந்த பாலின் நோக்கம் என்னவென்றால், இந்தியாவில் குழந்தைகள் பெரும்பாலும் வைட்டமின் D மற்றும் A சத்து குறைவால் பாதிக்கப்பட்டு வருவதாக ஒரு கருத்து இருக்கிறது, அதனை நோக்கமாக கொண்டு குழந்தைகளுக்கு சத்துக்குறைவை கட்டுப்படுத்த இந்த பால் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக ஆவின் விளக்கம் அளித்து இருக்கிறது.
ஒரு பக்கம் ஆவின் இவ்வாறாக விளக்கம் அளித்து இருந்தாலும், இன்னொரு பக்கம் இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது, அதாவது அரசு பாலின் விலையை ஏற்றுவதற்கு புதிய வழி ஒன்றை கையாள்வதாக எதிர் தரப்பினர் கூறி வருகின்றனர், ஆனால் அரசு சார்பில் இந்த ஆவின் க்ரீன் மேஜிக் + பால் வகை, குழந்தைகளின் சத்துக்குறைவை மையப்படுத்தியே சந்தைப்படுத்துவதாக கருத்து விடுத்து இருக்கிறது.