Jio Airtel New Recharge Plan -ஜியோ நெட்ஒர்க் ஜாக் பாட் ,அட்டகாசமான ஐந்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
Jio Airtel New Recharge Plan-முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரீசார்ஜ் திட்டங்களை 30 சதவிகிதம் அதிகப்படுத்தி இருந்தது. விலைகள் அதிகப்படுத்தியதன் காரணத்தினால் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் -ஐ தேடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த வேலையில், சரியான நேரம் பார்த்து அடிக்கும் ஜியோ நெட்ஒர்க். உண்மையில் சொல்ல போனால் வாடிக்கையாளர்களுக்கு ஜாக் பாட் அடித்துள்ளது என்றே கூறலாம்.
ஜியோ நெட்ஒர்க் அட்டகாசமான ஐந்து புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ஐந்து திட்டங்களிலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றிற்கு வரம்பற்ற அழைப்பு, இதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகளை இதனுடன் இலவசமாகப் பெறலாம்.
Today Business News In Tamil- 18 நாட்கள் முதல் 28 நாட்கள் வரையிலான காலக்கெடுவுடன் ரூ.ரூ. 199,ரூ. 209,ரூ. 239,ரூ. 249, மற்றும் ரூ. 299. இந்த 5 ரீசார்ஜ் திட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. கீழ்க்கண்டவாறு இந்த 5 ரீசார்ஜ் திட்டங்களையும் விரிவாக பார்க்கலாம்.
ரூ. 199 ரீசார்ஜ் திட்டத்தின் கால அளவு - 18 நாட்கள் மற்றும் டேட்டா - 27 ஜிபி
(ஒரு நாளைக்கு 1.5 ஜிபி)
ரூ. 209 ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 22 நாட்கள் ஆகும்.
ரூ. 239 ரீசார்ஜ் திட்டத்தின் கால அளவு - 22 நாட்கள் மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி என்று மொத்தம் 33 ஜிபி டேட்டா.
ரூ. 249 ரீசார்ஜ் திட்டத்தின் கால அளவு - 28 நாட்கள் மற்றும் டேட்டா - 28 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு 1 ஜிபி ஆகும்.
ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தின் கால அளவு - 28 நாட்கள் மற்றும் 42 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி ஆகும்.
இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் தற்போது ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் இதுபோன்ற குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2