• India
```

சோமேட்டோ..ஆக்ரிதி சோப்ரா புதிய நோக்கங்களுக்காக பதவி விலகுகிவிட்டார்!

Zomato Co Founder | Zomato Co Founder News

Zomato Co Founder -சோமேட்டோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை மக்கள் அதிகாரியான ஆக்ரிதி சோப்ரா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் வேறு நோக்கங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு கீழே பார்க்கவும்.

ஓன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளம் சோமேட்டோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை மக்கள் அதிகாரியான ஆக்ரிதி சோப்ரா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் வேறு நோக்கங்களுக்காக விலகுவதாக சோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது ராஜினாமா இந்த மாதம் 27-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
13 ஆண்டுகளாக சோமேட்டோவை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். முன்னதாக, அவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும் செயல்பட்டார். சோமேட்டோவில் சேருவதற்கு முன்பு, சோப்ரா PwC-ல் மூன்று ஆண்டுகள் பணியாற்றி வரி மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளை செயல்படுத்தியுள்ளார்.

முதலில், கடந்த ஆண்டு ஜனவரியில் சோமேட்டோவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான குஞ்சன் படிதார், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜினாமா செய்தார். மேலும், மற்றொரு இணை நிறுவனர் மோஹித் குப்தா 2022-இல் ராஜினாமா செய்துள்ளார். மோஹின் குப்தா, 2020-ல் உணவு டெலிவரி வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து, சோமேட்டோவின் இணை நிறுவனர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.