Zero Oil Meals -ஜீரோ ஆயில், ஜீரோ பிளாஸ்டிக்ஸ், ஜீரோ ஹெல்த் இஸ்யூ என ஜீரோவை ஹீரோவாக மாற்றி உணவு புரட்சியில் ஒரு புது முன்னெடுப்பை எடுத்து இருக்கிறது சோயில் நிறுவனம்.
அது என்ன சோயில் நிறுவனம்?
உலகளாவிய அளவில் பல வியாதிகளுக்கு காரணமாக இருப்பது நாம் உணவுக்கு பயன்படுத்தும் ஆயில்கள் தான், பலவேறு இதய கோளாறுகளுக்கும் முதன்மையாக இருப்பதும் இந்த ஆயில்கள் தான், இதனை கருத்தில் கொண்டு சோயில் என்ற நிறுவனம் ஆயிலே இல்லாமல் சுவையான உணவுகளை தயாரித்து சந்தைப் படுத்தி வருகிறது, அது எப்படி ஆயிலே இல்லாமல் சமைக்க முடியும் என்றால், அதை தான் செய்து காட்டி இருக்கிறது இந்த சோயில் நிறுவனம்.
அப்படி என்றால் ஆயிலே இல்லாமல் எங்களுக்கு பிடித்த பிரியாணி கிடைக்குமா என்றால், நிச்சயம் கிடைக்கும், ஆயிலே இல்லாமல் சுவையான பிரியாணி நிச்சயம் கிடைக்கும், தற்போதைக்கு ஹரியானாவில் இருக்கும் குர்கானில் ரிப்ளக்ஸ் பார் & ப்ரீவரி டைனிங்கில் இந்த பிரியாணி சோயில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிறுவனம் ஆயிலுக்கு மட்டும் ஜீரோ சொல்லவில்லை, இந்த நிறுவனம் சமைப்பதற்கும் பேக்கிங் செய்வதற்கும் கூட எந்த ஒரு பிளாஸ்டிக் பொருள்களையும் உபயோகிப்பதில்லையாம், உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நிறமிகளுக்கு ஜீரோவாம், உணவுக்கு சுவையூட்டும் கெமிக்கல்களுக்கும் ஜீரோவாம், இவர்களின் கொள்கையே ஜீரோ இஸ் ஹீரோ என்பது தானாம்.
சரி, அடுத்து சோயிலின் திட்டம் என்ன?
தற்போதைக்கு நார்த் இந்தியன் உணவுகளை மட்டும் ஜீரோ ஆயில் மூலம் சுவை குறையாமல் தயாரித்து வரும் சோயில் நிறுவனம், அடுத்து இந்தியா முழுக்க இருக்கும் பாரம்பரிய உணவுகளை ஜீரோ ஆயில் மூலம் இந்தியா முழுக்க படைக்க திட்டமிட்டு இருக்கிறதாம், அதற்காக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை உணவில் செய்து வருகிறதாம், வெகு விரைவில் ஸ்விக்கி, சொமட்டோ நிறுவனங்களுடன் டை அப் வைத்துக் கொண்டு டெலிவரியிலும் பங்கெடுக்க இருக்கிறதாம்.
சரி, எதற்கு இந்த முன்னெடுப்பு?
அனைவருக்கும் உடலுக்கு கெடுதல் இல்லாத பண்டம், அனைவருக்கும் உடலுக்கு கெடுதல் இல்லாத உணவை ஜீரோ ஆயில் மூலம் சுவையுடன் கொடுக்க வேண்டும் என்பது தான் சோயிலின் நோக்கமாம்.