Zepto Founder Net Worth -இந்தியாவின் 23 வயதான CEO ஆதித் பளிச்சா, Zepto என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 4,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முன்னணி இடத்தில் உள்ளார். இவரை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
2001ல் பிறந்த ஆதித் பளிச்சா, தற்போது Zepto என்ற பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய நிறுவனத்தின் இளம் CEO ஆக அசத்தியுள்ளார்.இவர் மும்பையை சேர்ந்தவர், ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் கோவிட் பெருந்தொற்று காரணமாக அவரது திட்டங்கள் ஏமாற்றமடைந்தன.
கோவிட் காலத்தில் மக்களின் தேவைகளை உணர்ந்து, Zepto என்ற உணவுப் பொருள்கள் கிடைக்கும் நிறுவனத்தை தொடங்கிய பளிச்சா, தற்போது அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். Zepto, இந்தியாவில் மிக வேகமாக வளரும் நிறுவனங்களில் ஒன்றாக மதிப்பீடு செய்யப்படுகிறது, இதில் அதன் சந்தை மதிப்பு 2024 ஆகஸ்டு மாதத்தில் ரூ.11,600 கோடி எனப் கணக்கிடப்பட்டுள்ளது.
பளிச்சாவின் சொத்து மதிப்பு தற்போது ரூ. 4,300 கோடி என கூறப்படுகிறது. அவரது இணை நிறுவனர் மற்றும் குழந்தை பருவ நண்பர் கைவல்யா வோஹ்ராவுக்கும் இதே அளவு சொத்து மதிப்பைப் பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.