Youngest Self Made Entrepreneurs - இந்தியாவில் செயல்பட்டு பிரபல Q Commerce நிறுவனம் ஆன Zepto ஆரம்பத்தில் ஒரு இருவர் மட்டும் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனம், கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பலிச்சா என இருவரும் மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் கிடைத்த வாய்ப்பை துறந்து, கொரோனோ காலத்தில் ஒரு குட்டி டெலிவரி நிறுவனத்தை ஏற்படுத்தினர்,
அவர்கள் வசித்த பகுதிகளில் கிரன் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை இருக்கும், கைவல்யா மற்றும் ஆதித் என இருவரும் அந்த கடையுடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, கிரன்மார்ட் என்ற டெலிவரி நிறுவனத்தை ஏற்படுத்தினர், கொரோனோ காலத்தில் வெளியில் வந்து பொருள்களை வாங்க முடியாதவர்களுக்கு இருவரும் இணைந்து டெலிவரியை கொடுத்து வந்தனர்,
2020 முதல் 2021 வரை சிறப்பாக செயல்பட்டு வந்த இவர்களது கிரன்மார்ட் கொரோனோ காலம் முடிவடைந்ததும் கொஞ்சம் டெலிவரியில் பின்வாங்கியது, பின்னர் இவர்கள் கொஞ்சம் கிரன்மார்ட்டை ரீ பிராண்ட் செய்து Zepto என்னும் Q Commerce நிறுவனத்தை ஏற்படுத்தினர், உணவு, மளிகை, எலக்ட்ரானிக்ஸ், இதர பொருள்கள் என அனைத்தையும் செயலிகள் மூலம் ஒருங்கிணைத்து தற்போது டெலிவரி செய்து வருகின்றனர்.
தற்போது Zepto நிறுவனத்தை விரிவுபடுத்தி இன்று தேசம் முழுக்க 250 டெலிவரி மையங்களை கொண்டு இயங்கி வருகின்றது. இருவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர் நிகர மதிப்பை கொண்டு இருக்கிறது, இந்த நிலையில் Zepto நிறுவனத்தின் இணை நிறுவனர் கைவல்யா வோஹ்ரா, Huran வெளியிட்டு இருக்கும் இந்தியாவின் இளம் தொழில் முனைவோர் பட்டியலில் முதல் இடத்தில் இடம் பிடித்து இருக்கிறார்.
" Zepto நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் ஆதித் பலிச்சா இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது "