World Population 2024 - ஒரு நாட்டிற்கு ஆயுத பலம் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல மக்கள் பலமும் ரொம்ப ரொம்ப முக்கியம், அதே சமயத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பொருளாதாரச்சமநிலையை ஏற்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கிறது, அந்த வகையில் ஒரு 7 வருடத்திற்கு முன்பு சீனா தான் உலகளாவிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தது.
ஆனால் சீன அரசு எதிர்கால பொருளாதார இலக்குகளை கருத்தில் கொண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டது, தற்போது உலகளாவிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது, இந்தியா அப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
2024 அமெரிக்க சென்சஸ் நடத்திய ஆய்வில் உலகளாவிய அளவிலான மக்கள் தொகை என்பது 8.09 பில்லியனாக இருப்பதாக தகவல், ஒவ்வொரு நொடிக்கும் உலகில் 4.2 மக்கள் பிறப்பதாகவும், 2 மக்கள் இறப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது, இந்தியா இப்பட்டியலில் 1.45 பில்லியன் மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இருக்கிறது. உலகளாவிய மக்கள் தொகையில் இந்தியா 17.78% யை கொண்டு இருக்கிறது.
இன்னும் 50 முதல் 60 வருடங்களில் உலகளாவிய மக்கள் தொகை ஆனது 10.3 பில்லியன் மார்க்கை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியா தொடர்ந்து கட்டற்ற மக்கள் தொகையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, இன்னும் 30 வருடங்களில் இந்தியாவின் மக்கள் தொகை 2 பில்லியன் மார்க்கை தொட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.