• India
```

உலகின் மிகவும் விலை உயர்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா...எந்த நாடுன்னு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப் படுவீங்க...!

Costly Passport In The World

By Ramesh

Published on:  2024-11-22 15:28:13  |    184

Costly Passport In The World - பிரபல நிறுவனம் ஒன்று உலகின் விலை உயர்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Costly Passport In The World - பாஸ்போர்ட் என்பது ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தேவைப்படும் முதல் ஆவணம் ஆகவும், முதன்மையான ஆவணமாகவும் இருந்து வருகிறது, பொதுவாக ஒவ்வொரு நாடுகளும் தங்களது பாஸ்போர்ட்டிற்கு ஒவ்வொரு விதமான கட்டணத்தை வசூலிக்கின்றன, அந்த கட்டணங்கள் இந்திய மதிப்பில் ரூ 1500 முதல் ரூ 20,000 இடையிலான விலையில் இருக்கின்றன.

முதலில் உலகின் மிக விலை குறைந்த பாஸ்போர்ட் குறித்து பார்க்கலாம், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் தான் உலகின் மிக விலை குறைந்த பாஸ்போர்ட் ஆக பார்க்கப்படுகிறது, அங்கு ஒரு பாஸ்போர்ட்டின் விலை ரூ 1,400 ஆக இருக்கிறது, அதற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது விலை குறைந்த பாஸ்போர்ட் ஆக இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது.



10 வருடத்திற்கான இந்திய பாஸ்போர்ட்டின் விலை என்பது சரியாக ரூ 1,524.95 ரூபாயாக இருக்கிறது, ஹங்கேரி, ஸ்பெயின், கென்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் உலகின் மிகக்குறைந்த பாஸ்போர்ட்டுகளை விநியோகம் செய்யும் நாடுகள் வரிசையில் அடுத்தடுத்து வருகின்றன, சரி அடுத்த கட்டமாக உலகின் மிக விலை உயர்ந்த பாஸ்போர்ட்டுக்கு வருவோம்.

பொதுவாக நாம் உலகின் விலை உயர்ந்த பாஸ்போர்ட் என்றால் அது அமெரிக்கா, இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகள் என நினைப்போம் அது தான் இல்லை, மெக்ஸிகோவின் பாஸ்போர்ட் தான் உலகின் மிக விலை உயர்ந்த பாஸ்போர்ட்டாக் அறியப்படுகிறது, அதன் விலை இந்திய மதிப்பில் 19,481.75 ரூபாயாக இருக்கிறது, அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் பாஸ்போர்ட் 19,041 ரூபாய், அமெரிக்காவின் பாஸ்போர்ட் 13,868 ரூபாயாக இருக்கின்றன.