Blue Java Banana - ஐஸ் க்ரீம் வாழைப்பழம் என்று அழைக்கப்படும் ப்ளு ஜாவா வாழைப்பழம் குறித்தும் இந்தியா அதற்கான சூழலைக் கொண்டு இருக்கிறதா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Blue Java Banana - ப்ளு ஜாவா வாழைப்பழம் எனப்படும் ஐஸ்க்ரீம் வாழைப்பழம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அதாவது இந்தியாவில் வாழைப்பழம் என்றால் பச்சை, மஞ்சள், சிகப்பு என கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் இந்த வாழைப்பழமே ஊதா நிறத்தில் இருக்கும், சுவையும் மற்ற வாழைப்பழங்களை போல அல்லாமல் ஒரு வெண்ணிலா ஐஸ்க்ரீம் போல சுவை இருக்கும் என கூறப்படுகிறது.
பொதுவாக இந்த வாழைப்பழங்கள் தென் கிழக்கு ஆசியாவிலும், வட ஆஸ்திரேலியாவிலும் மட்டுமே அதிகம் பயிரிடப்படுகிறது, இது ஒரு ஹைபிரிட் வகை தான் என்றாலும் கூட மக்களால் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய வகையாக இருக்கிறது, இது 15 அடி முதல் 20 அடி வரை வளரக்கூடும், மற்ற வாழைகளை போல அல்லாமல் காற்று மற்றும் கடும் குளிரை கூட எளிதாக தாங்கும்.
ட்ராபிக்கல் மற்றும் சப் ட்ராபிக்கல் சூழலில் இந்த ஐஸ்க்ரீம் வாழை வளரும் என கூறப்படுகிறது, இந்த வாழை நன்கு வளர ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு 6 - 8 மணி நேரம் ஆவது 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான சூரிய ஒளியில் இருக்க வேண்டுமாம், நீரோட்டம் எப்போதும் இருக்க வேண்டுமாம், ஆனாலும் அவ்வப்போது மண்ணை உலர செய்வதும் அவசியம் ஆகிறது.
சரி இந்த வாழை இந்தியாவில் வளருமா என்றால் நிச்சயமாக வளரும், கர்நாடகா மாநிலம் மங்களுரு பகுதியில் இந்த வாழை 25 ஏக்கருக்கும் பயிரிடப்படுவதாக ஒரு தகவல் இருக்கிறது, பொட்டாசியம், நார்ச்சத்துகள், வைட்டமின்கள் என முக்கிய சத்துக்கூறுகள் இருப்பதால் இந்த வாழைப்பழத்திற்கு என்று உலகளாவிய சந்தைகளில் ஒரு மவுசு இருக்கிறது.
" பொதுவாக இந்த ஐஸ்க்ரீம் வாழைப்பழம் சந்தைகளில் அதன் தரத்தை பொறுத்து கிலோ ரூ 100 முதல் 500 வரை விற்கப்படுவதாக தகவல் "