• India
```

6 நாள் அலுவலக வேலையை ஆதரிக்கிறேன்...வேலைக்கு வந்த பின்னர் வாழ்கை சமநிலையை எல்லாம் எதிர்பார்க்க கூடாது - நாராயண மூர்த்தி

WFH Not Suitable For India, 6 Days Office Work Is Mandate

By Ramesh

Published on:  2024-11-15 21:57:45  |    220

WFH Not Suitable For India, 6 Days Office Work Is Mandate - வேலைக்கு வந்த பின்னர் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை எல்லாம் எதிர்பார்க்க கூடாது என இன்போசிஸ் நாராயண மூர்த்தி கறாராக தெரிவித்து இருக்கிறார்.

WFH Not Suitable For India, 6 Days Office Work Is Mandate - பிரபல இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆக அறியப்படும் நாராயண மூர்த்தி, அடிக்கடி அலுவலக வேலையை ஆதரித்து தன் கருத்துக்களை கூறி வருகிறார், இதனால் இணையத்தில் ஒரு சில ஊழியர்கள் நாராயணமூர்த்தி அவரின் கருத்திற்கு எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர், ஆனாலும் கூட நாராயண மூர்த்தி அவர்கள் 6 நாட்கள் அலுவலக வேலையில் உறுதியாக இருக்கிறார்.

ஒரு நாட்டின் பிரதமர் நினைத்தால் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வேலை செய்து விட்டு மீதி நேரம் நன்றாக ஓய்வு எடுக்கலாம், அவரை யாரும் எதுவும் கேட்க போவதில்லை, ஆனால் அவரே வாரத்திற்கு 100 மணி நேரம் உழைத்திடும் போது, அதன் பிரஜைகள் ஒரு 60 மணி நேரம் அல்லது 70 மணி நேரம் உழைப்பதில் என்ன ஆகி விட போகிறது, நம் நாடு ஒரு வளர்ந்து வரும் நாடு தான், வளர்ந்த நாடு அல்ல, 



வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளே வாரத்திற்கு 5 நாள் வேலையை அமல்படுத்தி வருகின்றன. அப்படி இருக்கும் போது ஒரு வளரும் நாடு அது வளர்ந்த நாடாக மாறுவதற்கு எவ்வளவு உழைக்க வேண்டி இருக்கும், அவர்களே 5 நாட்கள் உழைக்கும் போது நாம் 6 நாட்கள் உழைப்பதில் தப்பே இல்லை, நாங்கள் எல்லாம் பணிபுரியும் போது நாளுக்கு 14 மணி நேரம் பணி புரிந்து இருக்கிறோம்.

காலை 6:30 மணிக்கு வேலை ஆரம்பித்தால் வேலை முடிய இரவு 8:30 ஆகும், வீட்டிற்கு வர 10 ஆகி விடும், ஓய்வு பெறும் வரை வேலை அப்படி தான் இருந்தது, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்திடும் போது இந்த வாழ்க்கைச் சமநிலையை எல்லாம் ஊழியர்கள் எதிர்பார்க்க கூடாது, பிற்கால சமநிலைக்காக தற்கால சமநிலையை உடைப்பது தான் உங்களை முன்னேற்றிடும் என இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறி இருக்கிறார்.