Volkswagen India, அதன் பிரபலமான Sedan Class கார் Virtus-ல் இரண்டு புதிய வகை கார்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், அதனுடைய சிறப்பு அம்சங்கள் மற்றும் அதனுடைய விலைகளை பற்றி பார்க்கலாம்.
Volkswagen India, அதன் பிரபலமான Sedan Class கார் Virtus-ல் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. Virtus GT Line மற்றும் Virtus GT Plus எனும் புதிய வகைகள் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
Volkswagen விலை விவரங்கள் பற்றி பார்க்கலாம்,
Virtus GT Line-ன் ஆரம்ப விலை ரூ.14.07 லட்சம், மற்றும் Virtus GT Plus-ன் ஆரம்ப விலை ரூ.17.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், Volkswagen நிறுவனம் Virtus மற்றும் Taigun கார்கள் இரண்டிற்கும் Highline Plus டிரிம்மையும் அறிமுகம் செய்துள்ளது. Taigun GT Line-க்கு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன.
Volkswagen அம்சங்கள் பற்றி பார்க்கலாம்,
Virtus GT Line மற்றும் GT Plus மாடல்கள், அழகியல் மற்றும் ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்த பல புதுப்பிப்புகளை கொண்டுள்ளன.மேலும், வெளியுறுப்பில், smoked LED headlights, Carbon Steel Grey roof, GT badge, red brake calipers (GT Plus வகையில்), dark chrome-finished door handles, மற்றும் 16-inch black alloy wheels ஆகியவை இருக்கின்றன.இந்த புதிய வகைகள் Volkswagen-ன் ஆக்கிரமிப்பு ஸ்டைலிங்கை மேலும் உயர்த்துவதாக உள்ளது,என்பது குறிப்பிடத்தக்கது.