Vijay Kedia Net Worth -விஜய் கேடியா இன்றைய தொழிலதிபர்,14 ரூபாய் இல்லாமல் துவங்கிய தனது பயணத்தில் இப்போது 800 கோடியை குவித்துள்ளார்.கடினமான சூழ்நிலைகளை தாண்டி, அவர் இன்று புகழ்பெற்ற முதலீட்டாளராக விளங்குகிறார்.
விஜய் கேடியாவின் தந்தை ஒரு ஸ்டாக் ப்ரோக்கர் என்பதுடன், அவர் 10ம் வகுப்பு படிக்கும் போது அவருடைய தந்தை இறந்துவிட்டார். இதனால், குடும்பப் பொறுப்புகளை விஜய் கேடியா ஏற்றுக்கொண்டார்.பிறகு, அவருடைய 19வது வயதில் பங்குச்சந்தையில் ஈடுபட்ட போது,நினைத்து பார்க்க முடியாத அளவிற்ற்கு மாபெரும் நஷ்டத்தை சந்தித்தார்.இந்நிலையில்,அதற்கா
இந்த நிலையை மாற்ற முடிவு செய்த விஜய் கேடியா, 1990-ம் ஆண்டு கொல்கத்தா விட்டு மும்பைக்கு பயணம் செய்தார்.1992-ல் இந்திய பங்குச்சந்தை மிகுந்த வளர்ச்சி அடைந்த போது, விஜய் கேடியா தனது முதலீடுகளை செய்ய தொடங்கினார்.கொல்கத்தாவை சேர்ந்த பஞ்சாப் டிராக்டர் நிறுவனத்தின் பங்குகளை ரூ. 35,000 க்கு வாங்கிய விஜய் கேடியா, சந்தை வளர்ச்சி அடைந்ததால் அந்த பங்கு மதிப்பு 5 மடங்காக உயர்ந்துள்ளது.
இந்த வெற்றியை பயன்படுத்தி, ஏசிசி நிறுவனத்தின் பங்குகளை விஜய் கேடியா வாங்கினார், இதன் மதிப்பு ஒரு ஆண்டில் 10 மடங்காக அதிகரித்தது.இந்நிலையில், 2022-ல் சியாராம்ஸ் மில்க் நிறுவனத்தில் 1.1% பங்குகளை வாங்கிய Vijay, தற்போது 800 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளார்.