• India

ரூ 7600 கோடிக்கு 100 வஜ்ரா பீரங்கிகள்...L And T நிறுவனத்துடன்...பாதுகாப்பு துறை அமைச்சகம் புதிய ஒப்பந்தம்...!

Vajra Artillery Gun Deals With L And T

By Ramesh

Published on:  2024-12-21 15:39:25  |    46

Vajra Artillery Gun Deals With L And T - இந்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் தொடர்ந்து ’இந்தியாவிலேயே தயாரிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு இந்திய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட உபகரணங்களுக்கும், ஆயுதங்களுக்கும் நிதி ஒதுக்கி வருகிறது, இதனால் எதிர்காலத்தில் இந்தியா ஆயுதங்களுக்காகவும், போர் விமானங்களுக்காகவும் எந்த நாட்டையும் சார்ந்திருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில் பல்வேறு இந்திய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட உபகரணங்கள், செயற்கை கோள்கள், ஆயுதங்கள், பீரங்கிகள்,ஏவுகணைகள் எல்லாம் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் நீண்ட தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் தன்மை உடைய வஜ்ரா பீரங்கிகள் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.



இந்த வஜ்ரா வகை பீரங்கிகள் தயாரிப்பிற்கு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம்,  L And T நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டு இருக்கிறது, அந்த ஒப்பந்தத்தின் மூலம் முதற்கட்டமாக 100 வஜ்ரா பீரங்கிகள் தயாரிப்பதற்கு ரூ 7,628 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது, இந்த தயாரிப்புகள் இந்திய ராணுவத்தை மேலும் வலிமைப்படுத்தும் என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து இருக்கிறது.

இந்த வஜ்ரா வகை பீரங்கிகள் எந்த ஒரு கால நிலை மாற்றத்திலும், எந்த ஒரு பருவ நிலை மாற்றத்திலும், எத்தகைய உயரத்திலும், ஜீரோ டிகிரி வெப்ப நிலையிலும் கூட முழுத்திறனை காட்டும் வல்லமை உடையதாக கருதப்படுகிறது, இந்தியாவிலேயே தயாரிப்போம் என்பதன் கீழ் இந்திய பாதுகாப்பு என்பது மேலும் இதன் மூலம் நவீனப்படுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.