• India
```

அமெரிக்க தேர்தல்..கூகுள் ஊழியர்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்..சுந்தர் பிச்சை வேண்டுகோள்..!

US Election 2024 Google CEO Waring Their Employees

By Ramesh

Published on:  2024-11-06 17:43:39  |    245

US Election 2024: Google CEO Waring Their Employees - அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் கூகுள் ஊழியர்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

US Election 2024: Google CEO Waring Their Employees - பொதுவாக அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் 50 சதவிகித பலனை தருகிறது என்றால், சமூக வலைதளங்களும், இணையதளங்களும் மீதி பலன்களை தருகின்றன, இதற்காகவே வேட்பாளர்கள் சமூக வலைதளம் மற்றும் இணைய தள விளம்பரங்களுக்காக மட்டும் பல மில்லியன் டாலர்களை செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது,

ஒரு சில சமூக வலைதளங்களும், இணையதளங்களும் கூட வேட்பாளர்களுக்கு இணங்கி அவர்கள் சொல்வதை அப்படியே விளம்பரப்படுத்தி அவர்களுக்கு இணங்கும் ஒரு சார்பு ஊடகமாகவே செயல்பட்டு வருகின்றன, இன்னும் சில ஊடகங்கள் எதிர்தாரர்களை மட்டுப்படுத்தி, தங்கள் சார்பாளர்களை உயர்வாக காண்பிப்பதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர்,



அது தேர்தலில் பெரிய இம்பேக்டும் கொடுக்கிறது, இது அமெரிக்க தேர்தலில் மட்டும் அல்ல, இந்திய தேர்தலிலும் கூட நிகழ்ந்து இருக்கிறது, கூகுளின் ஒரு சில ஊழியர்களும் வேட்பாளர்களுக்கு இத்தகைய சார்பு ஊடகமாக செயல்பட்டு வருவதாக ஒரு புகார் எழுந்தது, ஏற்கனவே பவுண்டெம் பிரச்சினையில் சிக்கி இருக்கும் கூகுள் இப்படி ஒரு பிரச்சினையிலும் சிக்க விரும்பவில்லை,

இதனால் கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையே இந்த விவகாரத்தில் தலையிட்டார், அதாவது கூகுளின் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மெயில் அனுப்பி அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் அனைவரும் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார், அவ்வாறாக விதிகளை மீரும் பட்சத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரித்து இருக்கிறார்.