US Sends Back Indian Immigrants - அமெரிக்க அரசு 205 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது, ஏற்கனவே அமெரிக்க பொருள்களுக்கு அதீத வரி விதிக்கும் நாடுகளுக்கு எல்லாம் அதை விட இரண்டு மடங்கு இறக்குமதி வரி விதிப்போம் என ட்ரம்ப் எச்சரித்து இருந்தார், அது மட்டும் அல்லாது பிரிக்ஸ் நாடுகளுக்கும் ஒரு வார்னிங் கொடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் வர்த்தகத்திற்கு டாலருக்கு பதில் புதிய கரன்ஸ்சியை தேர்வு செய்ய பிரிக்ஸ் மாநாட்டில் பேசப்பட்டது, அதிலும் உடன்படாத ட்ரம்ப் அரசு அவ்வாறெல்லாம் செய்தால் பிரிக்ஸ் குழுவில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் 100 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.
இது போக குடியுரிமை சட்டத்திலும் ஒரு சில மாறுதல்கள் செய்து இருந்தார், அதாவது இனி அமெரிக்காவில் பிறக்கும் பிற நாட்டினவரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது என அறிவித்து இருந்தார், அது போக சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடி இருக்கும் அனைத்து மக்களும் மொத்தமாக வெளியேற்றப்படவும் ட்ரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
அந்த வகையில் அமெரிக்காவில் குடி இருக்கும் 55 இலட்சம் இந்தியர்களுள் 8 முதல் 12 இலட்சம் இந்தியர்கள் சட்ட விரோதமாக தான் குடியேறி இருப்பதாக ட்ரம்ப் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது, அந்த வகையில் முதற்கட்டமாக சட்ட விரோதமாக குடியேறி இருந்த 205 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு தனி இராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்து இருக்கிறது ட்ரம்ப் அரசு.
" நாளடைவில் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது, பொறுத்து இருந்து பார்க்கலாம் "