Trump Departs Another Batch Of Indian Migrants - இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் இரு நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்களை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக தரையிறக்க இருக்கிறது, இந்தியா என்ன செய்ய போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
அமெரிக்காவில் வசிக்கும் 55 இலட்சம் இந்தியர்களுள் 8 முதல் 12 இலட்சம் வரையிலான இந்தியர்கள் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் வசிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அந்நிய நாட்டினர் எந்த வித ஆவணங்களும் முறையாக இல்லாமல் அமெரிக்காவில் வசிப்பது அமெரிக்கவிற்கு அச்சுருத்தலாக இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் திருப்பி அனுப்பி வருகிறார்.
அந்த வகையில் முதற்கட்டமாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என 104 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு தனி அமெரிக்க இராணுவ விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர், சாப்பிட கூட கைகளின் விலங்கை அவிழ்த்து விடாமல் கால்களும் கட்டப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக சர்ச்சைகள் பல எழுந்தன.
இந்த நிலையில் இரண்டு அடுத்தடுத்த நாட்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் மூலம் இரு நூறுக்கும் மேற்பட்ட இந்தியர்களை பஞ்சாப் அமிர்ததரஸ்சில் தரையிறக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அதில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.
சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்றாலும் கூட, ஒரு நட்புறவு நாடு என்று கூட பார்க்காமல் அமெரிக்கா அவர்களை தரக்குறைவாக நடத்துவது பெரும் சர்ச்சையாகி வருகிறது, இந்திய அரசோ அதற்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் ட்ரம்பின் கட்டளைக்கு பணிந்து அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை இறக்குமதி வரியை குறைத்து அவர்களுக்கு சேவை செய்து வருகிறது என பலரும் இணையத்தில் சாடி வருகின்றனர்.