• India
```

போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு வராவிட்டால்...ரஷ்யா மீது மேலும் பொருளாதார நடவடிக்கைகள் விதிக்கப்படும்...ட்ரம்ப் எச்சரிக்கை...!

Trump Warns Russia

By Ramesh

Published on:  2025-01-22 09:58:27  |    133

Trump Warns Russia - பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது மேலும் ஒரு சில நடவடிக்கைகள் பாயும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

Trump Warns Russia - ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், வரி விதிப்பு, இரு பாலின நடவடிக்கை, அமெரிக்க குடியுரிமை என அவர் அறிவித்த அனைத்து நடவடிக்கைகளுமே உலக நாடுகளில் பேசு பொருளாகி வருகிறது, ரஷ்யா உக்ரைன் போர் குறித்தும் ஒரு சில தீர்வு நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது,

ஏற்கனவே சீன அதிபரிடம் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப் பேசி இருக்கிறாராம், ரஷ்ய அதிபர் புதினிடம் போர் நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க சொல்லி பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது, ஆனால் புதின் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தாலோ, புதின் பேச்சு வார்த்தைக்கு உடன் படவில்லை என்றாலோ ரஷ்யா மீது மேலும் நடவடிக்கைகள் பாயும் என ட்ரம்ப் எச்சரித்து இருக்கிறார்.



ட்ரம்பின் எச்சரிக்கைக்கு புதினோ ரஷ்ய அரசோ எந்த பதிலும் கொடுப்பதாக இல்லை, கடந்த இரண்டு மாதங்களாகவே ட்ரம்ப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்த போதும் ரஷ்ய அரசு அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை, உலகளாவிய அளவில் பல கண்டனங்கள் எழுந்தாலும் கூட உக்ரைனின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஆயிரம் நாட்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போர் தாக்குதல்களால் உக்ரைன் மொத்தம் ஆகவே சீர்குலைந்து இருக்கிறது என கூறலாம், ஒரு வேளை ரஷ்யா அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு, போர் நிறுத்தத்தை அறிவித்தாலும் கூட, உக்ரைன் இந்த பொருளாதார சீர்குலைவில் இருந்து மீள கிட்டத்தட்ட 75 வருடங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.