Trump Plan To Reduce Corporate Tax - அமெரிக்க அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் முதற்கட்டமாக நிதி பிரிவில் கார்பரேட் வரியை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Trump Plan To Reduce Corporate Tax - அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அமெரிக்கா ஒரு சில பொருளாதார மாற்றங்களை அடைந்து வருகிறது, ட்ரம்ப் ஆதரவு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் கோடிகளை சம்பாதிக்கின்றன, க்ரிப்டோ கரன்ஸி மதிப்பு தாருமாறாக உயருகிறது, சர்வதேச அளவில் பல நாடுகளின் பணங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு உயருகிறது.
இவ்வாறாக பல பொருளாதார மாற்றங்களை சந்தித்து வரும் அமெரிக்கா, தற்போது நிதி மற்றும் வரி பிரிவிலும் புதிய மாற்றத்தை சந்திக்க இருக்கிறது, அதாவது இதுவரை அமெரிக்கா கார்பரேட்டுகளுக்கு 21 சதவிகிதம் வரை வரி விதித்து வந்தது, ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்த கார்பரேட் வரியை குறைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது தற்போது அமெரிக்காவில் 21 சதவிகிதம் ஆக இருக்கும் கார்பரேட் வரி 6% வீதம் குறைக்கப்பட்டு 15 சதவிகிதமாக மாற்றப்பட இருப்பதாக தகவல், ஆனால் இந்த கார்பரேட் வரி குறைப்பு என்பது அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் தான் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.
ஏற்கனவே ட்ரம்ப் வெற்றியை அடுத்து எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் வருமானத்தை பார்த்து வருகின்றன, பங்குச்சந்தையிலும் மஸ்க்கின் முதலீடுகள் பன்மடங்காக இலாபத்தை கொடுத்து வருகின்றன, ட்ரம்ப் வெற்றியை அடுத்து தொடர்ந்து உயர்ந்து வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு இந்த கார்பரேட் வரி குறைக்கப்பட்டால் இன்னும் உயர வாய்ப்பு இருக்கிறது.