Trump Fires 2000 USAID Workers - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் USAID அமைப்பில் இருந்து இரண்டாயிரம் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி இருக்கிறார், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
USAID (United States Agency for International Development) என்பது சர்வதேச நாடுகளுடைய மேம்பாடுகளின் பங்களிப்பிற்காக அமெரிக்கா உருவாக்கிய ஒரு நிறுவனம் ஆகும், ஆண்டுக்கு இந்த நிறுவனத்தின் மூலம் 50 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட நான்கு இலட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் கோடி ரிலீஸ் செய்யப்பட்டு அமெரிக்க நட்புறவு நாடுகளின் வளர்ச்சிக்கு நிதி அளிக்கப்படும்.
ஆனால் இந்த USAID அமைப்பின் கீழ் முறைகேடாக பல நாடுகள் நிதி உதவி பெற்றதாகவும், அமெரிக்காவின் முந்தைய ஆளும் அரசும் அதற்கு துணை புரிந்ததாகவும் ட்ரம்ப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி அந்த அமைப்பிற்கும், அந்த அமைப்பில் இருந்து வெளியேறும் நிதிகளுக்கும் தடை விதித்து இருந்தார், இந்த தடையை எதிர்த்து USAID அமைப்பினர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர்.
முதலில் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிமன்றம், ட்ரம்ப் நிர்வாகம் கொடுத்த விளக்கங்களுக்கு பின்னர் USAID நிதிகளுக்கான தடைக்கு செவி சாய்த்தது, இந்த நிது சர்வதேச நாடுகளின் மேம்பாடுகளுக்கு செல்லாமல் ஒரு சில அமைப்பிற்கும், ஒரு சில நாட்டு ஆளுமைகளின் தனிப்பட்ட மேம்பாடுகளுக்கும் சென்றதாக ட்ரம்ப் உறுதியாக கூறுகிறார்.
அந்த வகையில் நிதி தடையை அறிவித்து, USAID அமைப்பில் இருந்து இரண்டாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தும் ட்ரம்ப் உத்தரவு இட்டு இருக்கிறார், ஒரு சில முக்கிய தலைமைகளை விட USAID அமைப்பில் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர், USAID ஊழியர்கள் தொடர்ந்து இந்த பணி நீக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
" அமெரிக்காவில் நீடிக்கும் இந்த தற்போதைய சூழல் என்ன ஆக போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் "