Transgenders Ban On Women Sports - அமெரிக்காவில் இனி திருநங்கைகள் பெண்கள் பிரிவில் விளையாட்டுகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என ட்ரம்ப் உத்தரவு இட்டு இருக்கிறார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் ஆனதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், அவரது நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு தொந்தரவாக இருக்கிறது என்றால் கூட பரவாயில்லை, ஆனால் சொந்த நாடுகளுக்கே தொந்தரவாக இருப்பது தான் இங்கு பிரச்சினையாக இருக்கிறது, ட்ரம்ப் பதவி ஏற்று முழுதாய் 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில் 300 பிரச்சினைகளை இழுத்து போட்டு இருக்கிறார்.
தொடர்ந்து மக்களின் உணர்வுகளை ட்ரம்ப் சீண்டி வருவதாக பல குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிலேயே எழுந்து வருகின்றன, முன்பாக அமெரிக்காவில் இனி இரண்டே பாலினம் தான் என ட்ரம்ப் குறிப்பிட்டது உலகளாவிய அளவில் பேசுபொருளாக மாறியது, ஒருவர் அவரது பிறப்பில் அவரது பாலினத்தை தேர்வு செய்ய முடியாது என்னும் போது ட்ரம்ப் அவ்வாறு கூறுவது தவறு என பலரும் முன்மொழிந்தனர்.
இந்த நிலையில் தற்போது விளையாட்டுகளில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் ஆட தடை என ட்ரம்ப் அரசு உத்தரவிட்டு இருக்கிறது, இது பொதுவான ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகளில் பின்பற்றப்பட்டு வந்தாலும் கூட, ட்ரம்ப் இவ்வாறு ஹைலைட் செய்து குறிப்பிடும் போது, மூன்றாம் பாலினத்தவர்களின் உணர்வுகள் அங்கு கொச்சைப்படுத்தப்படுவதாக கருதுகின்றனர்.
இது அமெரிக்க மக்களிடையே ஒரு வெறுப்பு அரசியலையும், மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான ஒரு வித வெறுப்பையும் உருவாக்கும் என சமூக பொது செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர், பெண்கள் விளையாட்டில் திருநங்கைகளுக்கு தடை என அழுத்தி கூறுவதை காட்டிலும், திருநங்கைகளுக்கு இனி தனி பிரிவில் விளையாட்டுகள் வைக்கப்படும் என கூறி இருந்தால் பாலின சமநிலையை நிலை நிறுத்துவதாக இருக்கும்.