Tokyo 4 Days Work Week Policy - ஜப்பான் தலைநகர் டோக்கியோ பெருநகரம், 4 நாள் அலுவலக வேலையை அறிமுகப்படுத்த இருக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tokyo 4 Days Work Week Policy - பொதுவாக நிறுவனச் சமநிலை என்பதை கருத்தில் கொண்டு வாரம் 5 நாள் வேலை, வாரம் 6 நாள் வேலை என நிறுவனங்கள் போட்டி போட்டு அறிவித்துக் கொண்டு இருக்கின்றன, ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மை வேண்டாமா என்று கேட்டால் நிறுவனத்திற்காக எத்துனை நாட்கள் என்றாலும், எத்துனை மணி நேரங்கள் என்றாலும் ஊழியர்கள் உழைக்க தயாராக இருக்க வேண்டும் என பெரு நிறுவனர்கள் கூறுகின்றனர்.
உலகளாவிய அளவில் வாரத்திற்கு அதிக மணி நேரம் வேலை பார்க்கும் நாடுகளில் இந்தியா தற்போது முதலிடம் வகிக்கிறது, நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் முதல் 12 மணி நேரம் இந்திய ஊழியர்கள் பணி புரிவதாக தகவல், இது வெறும் அலுவலக வேலை நேரம் என்றாலும் கூட, வீட்டிற்கு சென்றாலும் அங்கும் அலுவக வேலையை தொடரும் நிர்ப்பந்தம் ஊழியர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வாறாக இந்தியா ஒரு நாளில் பாதி நாளை, ஒரு வாரத்தில் 6 நாளை அலுவலகத்திலேயே கடந்து கொண்டு இருக்கும் வேலையில், ஜப்பான் தலைநகரான, டோக்கியோ பெருநகர அரசாங்கம், வாரத்திற்கு நான்கு நாள் அலுவலக வேலையை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது, இது பணியிடத்தில் ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வு தன்மையை கொடுக்கும் என டோக்கியோ நம்புகிறது.
இது குறிப்பாக திருமணம் ஆன பெண்களுக்கு பணியிடத்தில் ஒரு நெகிழ்வு தன்மையை கொடுக்கும், பொதுவாக பெண்கள் திருமணம் ஆனதும் பணிச்சுமை காரணமாக வேலையை துறக்கின்றனர், அவர்களுக்கு 4 நாள் அலுவக வேலை என்பது இலகுவாக இருக்கும், இது போக பெண்கள் ஒரு நாளில் 2 மணி நேரம் பார்சியல் விடுமுறை எடுக்கவும் டோக்கியோவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
" அரசு அலுவலகங்களில் இந்த நான்கு நாள் அலுவலக வேலை என்பது டோக்கியோவில் ஏப்ரல் 2025 முதல் அமல்படுத்தப்படும் என தெரிகிறது "