TN SGST Revenue Increased Up To 20% - கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் GST வசூலில் புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறது.
TN SGST Revenue Increased Up To 20% - GST என்பது சரக்கு மற்றும் சேவை வரி என அறியப்படுகிறது, இது ஒரு மறைமுக வரி, பொருள்கள் மற்றும் சேவைகளின் மீது மத்திய அரசு மற்றும் மாநில அரசு விதிக்கும் வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரியாக மாற்றப்பட்டது தான் GST, இந்த வரியானது 0%, 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய விகிதங்களில் பொருள்களுக்கும், சேவைகளுக்கும் இந்தியா முழுக்க விதிக்கப்படுகிறது.
கடந்த நிதி ஆண்டில் ஒட்டு மொத்தமாக வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி என்பது கிட்டதட்ட 20.18 இலட்சம் கோடியாக இருந்தது, இது முன்னதான ஆண்டை விட 11.7% அதிகம் ஆகும், கடந்த நிதி ஆண்டில் அதிக பட்சமாக மஹாராஸ்டிரா 3.02 இலட்சம் கோடி GST வசூல் செய்து இருக்கிறது, தமிழகம் 1.13 இலட்சம் கோடி GST வசூல் செய்து நான்காவது இடத்தில் இருக்கிறது.
ஆனால் இந்த நிகழ் ஆண்டை ஒப்பிடும் போது தமிழகத்தின் GST வரி வசூல் என்பது சதவிகிதத்தில் பார்க்கும் போது கிட்டதட்ட 20 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்து இருக்கிறது, மற்ற மாநிலங்களை விட GST வசூலில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக தகவல், கடந்த நிதி ஆண்டில் தமிழகத்தின் SGST வசூல் 29,481.97 கோடியாக இருந்த நிலையில் இந்த நிதி ஆண்டில் 35,414.05 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும், உயர்வு சதவிகிதத்தை ஒப்பிடும் போது, தமிழகத்தின் GST வசூல் கிட்டதட்ட 20.12% உயர்ந்து இருக்கிறது, அதற்கு அடுத்த படியாக உத்தரபிரதேசத்தின் GST வசூல் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 14.35% உயர்ந்து இருக்கிறது, மூன்றாவது இடத்தில் குஜராத் மாநிலத்தின் GST வசூல் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 14.03% உயர்ந்து இருப்பதாக தகவல்.