Tesla New Update -முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக 16.80 லட்சம் கார்கள் திரும்ப பெறப்படும் என அறிவித்துள்ளது.மேலும்,முழு விவரங்களை பற்றி கீழ்வருமாறு பார்க்கலாம்
முன்னணி மின்சார வாகன நிறுவனமாக இருக்கும் டெஸ்லா, சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக 16.80 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படுவதாக சீன சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த கார்கள், பயணத்தின் போது டிரங்க் கதவு தானாகவே திறக்கும் அபாயம் உள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இதற்கான பிழைகளை சரிசெய்வதற்காக மென்பொருள் புதுப்பிப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாடல் S, மாடல் X, மற்றும் உள்ளூர் தயாரிக்கப்பட்ட மாடல் 3 மற்றும் மாடல் Y கார்கள் ஆகியவற்றில் இந்த சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபர் 15, 2020 முதல் ஜூலை 17, 2024 வரை தயாரிக்கப்பட்ட கார்கள் மட்டுமே இத்துடன் தொடர்புடையது.
சீன சந்தை டெஸ்லா நிறுவனத்திற்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது, மேலும் இங்கு கார்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. சீன EV உற்பத்தியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது, மேலும் விலைக் குறைப்பு மற்றும் குறைந்த வட்டி நிதியுதவியால் கூட, விற்பனை சரிந்து வருகிறது. இதன் விளைவாக, இரண்டாவது காலாண்டில் நிகர வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது.