Russia Cancer Vaccine - உலகளாவிய அளவில் புற்றுநோய் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட இறப்புகள் கிட்டதட்ட 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கிறது, ஒவ்வொரு வருடமும் புதியதாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 மில்லியனாக இருக்கிறது, இந்தியாவில் வருடத்திற்கு புற்றுநோயால் இறப்பவர்கள் கிட்டதட்ட 10 இலட்சமாகவும், புதியதாக பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் சராசரியாக 15 இலட்சமாகவும் இருக்கின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் மருத்துவ துறை புற்று நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்து இருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறது, அந்த தடுப்பூசி புற்று நோய் கட்டிகள் மற்றும் மெட்டாஸ்டாசிஸ்க்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக முதற்கட்ட ஆய்வில் தெளிவாகி இருக்கிறது, இந்த தடுப்பூசி புற்று நோய்க்கான நீண்ட கால மருத்துவ செயல்முறைகளை கணிசமாக துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டு பிடிப்பாக இந்த புற்றுநோய் தடுப்பூசி இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், இந்த தடுப்பூசி முதற்கட்டமாக 2025 யின் முதல் பாதியில் ரஷ்யாவில் விநியோகிக்கப்படும் என ரஷ்ய மருத்துவத்துறை தெரிவித்து இருக்கிறது, இது முழுக்க முழுக்க இலவசமாக விநியோகிக்கப்படும் எனவும் ரஷ்ய அரசு தெரிவித்து இருக்கிறது.
இந்த தடுப்பூசி எப்படி செயல்படும் எனக்கேட்டால், இது நோய் பாதிப்பிற்கு உள்ளான செல்களை கண்டறிந்து, அந்த செல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி விடும், நோய் எதிர்ப்பு மண்டலம் ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அந்த புற்று நோய் செல்களுக்கு எதிராக உருவாக்கும் போது புற்ரு நோய் செல்களின் பெருக்கம் தடைபடும், இது தான் ரஷ்யாவின் mRNA புற்று நோய் தடுப்பூசியின் செயல்பாடு.