• India
```

உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...ரஷ்யா மற்றும் அமெரிக்கா சவூதியில் பேச்சுவார்த்தை...!

Russia US Meeting In Saudi

By Ramesh

Published on:  2025-02-18 07:37:41  |    48

Russia And US Officials To Meet In Saudi - உக்ரைன் - ரஷ்யா இடையில் ஆன போரை நிறுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்க டாப் சவூதியில் பேச்சுவார்த்தை நிகழ்த்துகின்றன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் ஆன போர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளுமே பெரும் பொருளாதார இழப்பை தினம் தினம் சந்தித்து வருகின்றன, தற்போது போர் நின்றாலும் கூட, உக்ரைன் தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து மீள எப்படியும் 50 ஆண்டுகள் ஆவது ஆகலாம் என கூறப்படுகிறது.

இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போர் என்பது, இந்த இரு நாடுகளை மட்டும் பாதிக்காமல் சர்வதேச பொருளாதாரத்தையும் சேர்ந்து சீர் குலைக்கிறது, அதிபர் டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதில் முனைப்பாக இருக்கிறார். தொடர்ந்து ரஷ்யாவுடன் இந்த போரை நிறுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபடுவேன் எனவும் கூறி வந்தார்.



சரி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏன் இந்த உக்ரைன் - ரஷ்யா பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றால், உக்ரைனின் கனிம வளத்தின் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்து கொண்டே இருக்கிறது, எப்படியாவது அந்த கனிம வளத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டமாகவும் உள்நோக்கம் ஆகவும் இருக்கிறது.

இதற்காக உக்ரைன் உடன் இணைந்து ரஷ்யாக்கு எதிராக போர் இடவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது, ஆனால் உக்ரைன் அதிபர் இந்த டீலுக்கு சம்மதிக்கவில்லை என்பதால் தற்போது பஞ்சாயத்து என்ற பெயரில் ரஷ்யாவின் ஒரு சில உயர் அதிகாரிகளும் அமெரிக்காவின் ஒரு சில உயர் அதிகாரிகளும், உக்ரைனை அழைக்காமலே சவூதியில் பேச்சு வார்த்தையில் இன்று ஈடுபட இருக்கின்றன.