Reliance Shares Price -இந்திய பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்ததன் பின்னணி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலாளி முகேஷ் அம்பானி அவர்களின் சொத்து மதிப்பு ரூ 80,000 கோடியாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்ததன் பின்னணி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தற்பொழுது குறிப்பிடத்தக்க இழப்புகளை சந்தித்துள்ளன.மேலும்,செப்டம்பர் 30 அன்று சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் வரை குறைந்துள்ள நிலையில், ரிலையன்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு சென்றுள்ளன.
இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் ரூ 80,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகிருக்கிறது.மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3 சதவிகிதம் சரிந்து, பிறகு 0.89 சதவிகிதம் மேலும் குறைந்து காணப்படுகிறது. இதனால், செப்டம்பர் மாதத்தின் கடைசி நாளான 30 ஆம் தேதி அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 67,000 கோடி வரை சரிந்து விட்டது.