RBI New Governor - இந்திய பணவியல் கொள்கைகளை கையாளும் முக்கிய நிறுவனம் ஆக அறியப்படும், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்று இருக்கிறார்.
RBI New Governor - ரிசர்வ் வங்கி என்பது இந்தியாவின் நடுவண் வங்கியாக கருதப்படுகிறது, இதுவே அரசின் கருவூலமாக பார்க்கப்படுகிறது, பணங்கள் மற்றும் நாணயங்களை வெளியிடுவது, பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பது, பணவியல் கொள்கைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட அதிகாரங்களை மையமாக கொண்டு தனிப் பொறுப்பான ஆளுநர் என்னும் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது ரிசர்வ் வங்கி.
பொதுமக்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியை பயன்படுத்த முடியாது, ரிசர்வ் வங்கி பொது மக்கள் பயன்படுத்தும் ஏனைய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை கண்காணிக்க மட்டுமே செய்யும், மற்றும் வங்கிகள் செயல்படுவதற்கான ஒழுங்குமுறைகளை கையாளும், மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரிசர்வ் வங்கிக்கு 22 வட்டாரக் கிளைகளும் இருக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் அதன் ஆளுநரின் கீழ் மட்டுமே இருக்கும், அந்த வகையில் சக்தி காந்த தாஸ் கடந்த 6 வருடங்களாக ஆளுநர் பொறுப்பில் இருந்து வந்த நிலையில் அவரது பதவிக் காலம் முடிந்து தற்போது புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா அவரது இடத்தை நிரப்பி இருக்கிறார், அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
சஞ்சய் மல்கோத்ரா ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, ஐஐடியில் பொறியியல் பட்டம் முடித்தவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை பிரிவில் முதுகலைப் பட்டமும் முடித்து இருக்கிறார், பொருளாதார சரிவு, பண வீக்கம் என அவர் முன்னால் இருக்கும் சில பிரச்சினைகளை எவ்வாறு கையாள போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.