• India
```

தொழிலதிபர் அரவிந்த் சங்காவின் Rapido..1 பில்லியன் டாலர் மதிப்பில் unicorn ஆக எட்டியது..

Rapido Share Price Today | Business News In Tamil

By Dharani S

Published on:  2024-10-01 10:50:38  |    231

Rapido Share Price Today -IIT பட்டதாரியான அரவிந்த் சங்கா, தனது நண்பர்கள் உடன் 2015ல் "Rapido" என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சமீபத்தில், Rapido 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் unicorn ஆக உருவாகியுள்ளது.மேலும் இந்தப் பதிவில் இதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

இந்தியாவில், பலர் தங்கள் சொந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு முன்பு, பல ஆண்டுகள் மற்ற நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், IIT பட்டதாரியான அரவிந்த் சங்கா, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து 2015ல் ஐதராபாத்தில் "Rapido" என்ற நிறுவனத்தை அறிமுகம் செய்துள்ளார்.

சமீபத்தில், Rapido 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் unicorn அந்தஸ்தை பெறியுள்ளது.மேலும்,Rapido நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னர், அரவிந்த் 2014ல் "theKarrier" என்ற நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர், Flipkart நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

2012ல் IIT Bhubaneswar-ல் இருந்து B.Tech பட்டம் பெற்ற அரவிந்த், 2011ல் Tata Motors நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார். Rapido நிறுவனத்தின் மற்றொரு உரிமையாளரான பவன், IIT பட்டதாரி.இந்த ஆண்டில், Rapido, 1 பில்லியன் டொலர் மதிப்பை எட்டிய மூன்றாவது unicorn ஆகும். இதற்கு முன்னர் Krutrim மற்றும் Perfios நிறுவனங்களும் இதே அந்தஸ்தை பெற்றுள்ளன.