Pushpa 2 Ticket Price Hike - நடிகர் அல்லு அர்ஜூன் அவர்கள் நடிப்பில் வெளியாக இருக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் டிக்கெட் விலை 3,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
Pushpa 2 Ticket Price Hike - இயக்குநர் சுகுமார் அவர்களின் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர் நிறுவனத்தின் தயாரிப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹாத் பாசில், தனஜெயா, சுனில் அஜய் கோஷ் என பலரின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பான் இந்தியா ஹிட் அடித்த திரைப்படம் தான் Pushpa - The Rise, கிட்டதட்ட உலகளாவிய அளவில் படத்தின் வசூல் 400 கோடியை மிஞ்சியது குறிப்பிடத்தக்கது.
படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு என்பது படம் வெளியானதுமே அறிவிக்கப்பட்டது, Pushpa 2 - The Rule என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படம், வரும் டிசம்பர் 5 அன்று உலகளாவிய அளவில் வெளியாக இருக்கிறது, முதல் பாகம் வெளியானது போது இரண்டாம் பாகத்திற்கான வெறும் 10 சதவிகித படப்பிடிப்புகளே முடிவடைந்து இருந்ததாம்.
பின்னர் 2022 ஆகஸ்ட் மாதம் போட்டோ ஷீட் எல்லாம் நடத்தி விட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது, படத்தின் பட்ஜெட் 400 முதல் 500 கோடி ஆகலாம் என நிர்ணயிக்கப்பட்டு தான் படப்பிடிப்பு துவங்கியது, பட்ஜெட் கிட்டதட்ட 460 கோடியாக வந்து நின்றதாக தகவல், படத்தின் நீளம் 3 மணி நேரம் 20 நிமிடம் என சென்சார் போடு அறிவித்து இருக்கிறது.
படம் இரண்டு நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் புக்கிங் துவங்கி இருக்கிறது, ஆன்லைன் புக்கிங்கிலேயே புஷ்பா 2 திரைப்படத்தின் ஒரு டிக்கெட்டின் விலை என்பது ரூ 500 முதல் 3000 வரை விற்கப்பட்டு வருகிறதாம், டிக்கெட் விலையில் அதீதத்தால் சினிமா ரசிகர்கள் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்,
" படத்தின் வசூலை பெருக்குவதற்கு டிக்கெட்டின் விலையை அதிகரிக்க செய்வது எந்த வகையிலும் பலன் தராது. படத்தில் உங்களது உழைப்பும் திறமையும் இருக்கும் பட்சத்தில் படத்தின் வசூல் என்பது ஆட்டோமேட்டிக்காக ரசிகர்களால் உயர்த்தப்படும் என சினிமா வல்லுநர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் "