• India
```

வெறும் பன்னிரெண்டாயிரம் சம்பளம்...16 மணி நேர வேலை...வதைக்கப்படும் வெளிமாநில தொழிலாளர்கள்...!

Obstacles Faced by North Indian Workers

By Ramesh

Published on:  2024-12-05 16:47:26  |    136

Obstacles Faced by North Indian Workers - பன்னிரெண்டாயிரம் சம்பளத்திற்கு கிட்டதட்ட 16 மணி நேரம் வதைக்கப்படும் வெளிமாநில தொழிலாளர்களின் அவலம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Obstacles Faced by North Indian Workers - படிப்பும், தொழிலும் ஒரு மாநிலத்தில் உயரும் போது அந்த மாநிலத்தில் கூலி வேலைகளை செய்வதற்கான ஆட்கள் என்பது குறைந்து விடுகின்றனர், அதே சமயத்தில் காலம் காலம் ஆக கூலி வேலைகளை செய்து வருபவர்கள் அவர்களுக்கு என்று ஒரு சங்கம் ஆரம்பித்து, அதன்படி கூலி வேலைகளுக்கான தினசரி ஊதியத்தை நிர்ணயித்து இருப்பதால் கூலி வேலைகளுக்கான சம்பளமும் உயர்ந்து இருக்கிறது.

ஒரு கட்டுமான தொழிலாளர் தங்களது சங்கங்களின் மூலம் தினசரி கூலி என்பதை ரூ 1,100 முதல் 1,300 வரை நிர்ணயித்து இருக்கிறார்கள், கட்டுமானத்திற்கு உதவி புரியும் பணியாளர்கள் தினசரி கூலி என்பதை ரூ 850 முதல் ரூ 1,000 வரை நிர்ணயித்து இருக்கிறார்கள், ஒரு பெயிண்டர், ஒரு வெல்டர் சராசரியாக தினசரி கூலி என்பதை ரூ 1,200 முதல் 1,500 வரை நிர்ணயித்து இருக்கிறார்கள்.



ஒவ்வொரு கூலி தொழிலாளிகளும் சங்கம் வைத்து சம்பளத்தை நிர்ணயித்ததன் விளைவு, அங்கு அவரது இடத்தில் ஒரு வெளி மாநில தொழிலாளி வந்து நிற்கிறார், வட மாநிலங்களில் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்களை அங்கு இருக்கும் அமைப்புகளின் மூலம் அழைத்து, தொழிலதிபர்களும், பொறியாளர்களும், வணிகர்களும் தங்களது கூலி வேலைகளுக்கு தற்போது பயன்படுத்தி வருகின்றனர். 

அவர்களின் சராசரி தினசரி சம்பளமே ரூ 400 முதல் 800 வரை தான், ஆனால் வேலை என்பது மிகக் கடினமாகவும் அதுவும் 16 மணி நேரத்திற்கும் மேலாகவும் வதைக்கப்படுவதாக தகவல், இது கிட்டதட்ட ஒரு மனித உரிமை மீறல் ஆக இருப்பதால், அவர்களுக்கு சரியான சம்பளம் கிடைப்பதற்கும், வேலை நேரத்தை குறைப்பதற்கும் மனித உரிமை மீட்பாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.