• India
```

சென்னையை நோக்கி நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயல்...பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்...என்ன செய்யக் கூடாது...!

Precautions For The Fengal Cyclone

By Ramesh

Published on:  2024-11-30 16:18:24  |    293

Precautions For The Fengal Cyclone - ஃபெஞ்சல் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Precautions For The Fengal Cyclone - இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த ஃபெஞ்சல் புயல் தற்போது மெல்ல மெல்ல நகர்ந்து சென்னையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது, அது நிலப்பரப்பை தொடும் போது கிட்டத்தட்ட 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது, காற்று மட்டும் அல்லாமல் அதிகனமழையும் பெய்யக்கூடும் என தகவல் கிடைத்து இருக்கிறது.

பொதுவாக புயல் பாதிப்பு இருக்க கூடும் என அறியப்படும் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, தொழில்நுட்ப நிறுவனங்களுள் சில வீட்டில் இருந்து பணி புரியும்படி அறிவித்து இருக்கிறது, பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது, இதனால் மக்கள் பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுருத்தப்பட்டுள்ளது.



பாதுகாப்பில்லாத பகுதியில் இருப்பவர்கள் அரசு அமைக்கப்பட்டு இருக்கும் முகாம்களில் சென்று தங்கிக் கொள்ளலாம், மழை இரவு வரை நீடிக்க கூடும் என்பதால் தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது, அடிக்கடி வெளியில் செல்ல வேண்டாம், மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம், ஈரமான சுவர்களை தொடாமல் இருப்பது நல்லது.

கார்கள் இருக்கும் பட்சத்தில் ஏதாவது பாலத்தில் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள், பைக்குகளை பலரும் கையிறு கட்டி மாடிக்கு ஏற்றி விடுகின்றனர், அவசர தேவை தவிர மற்ற நேரங்களில் வெளியில் சுற்றுவதை முற்றிலுமாக தவிர்க்கவும், மொபைல்களில் சார்ஜ் முழுமையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், தேவையில்லாமல் மொபைல்களை பயன்படுத்த வேண்டாம்.

ஏதேனும் அபாயம் மற்றும் அவசர உதவிகளுக்கு 112, 1077 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம். 9488981070 என்ற வாட்சப் எண்ணையும் பயன்படுத்திக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.