Online Rummy Claims One More Life - தூத்துக்குடியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து இருக்கிறார்.
கொரோனா காலத்திற்கு முன்னதாக வெறும் 15% மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஆன்லைன் கேம்கள், அதற்கு பிறகு 67% ஆக உயர்ந்து இருக்கிறது, ஆன்லைன் கேம்களின் மூலம் பணத்தை வென்றவர்கள் ஒரு சதவிகிதம் பேராக இருந்தால், பணத்தை இழந்தவர்கள் 99% பேராக இருக்கின்றனர்.பெரும்பாலும் பணத்தை இழந்தவர்கள் மிடில் கிளாஸ் மக்களாக இருப்பதால் மனம் தளர்ந்து விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்,
கடந்த 3 வருடத்தில் தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 50 பேர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக தகவல். நேற்றைய தினம் தூத்துக்குடி ஓட்டபிடாரத்தை சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்கு தந்தைகளான கூலித் தொழிலாளி, ஆன்லைன் ரம்மியில் ஒரே நாளில் ரூ 20,000 பணத்தை இழந்ததை தாங்கி கொள்ள முடியாமல், தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறார்.