Ola Latest News-50 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, தற்போது 20 ஆயிரம் கோடி சொத்து மதிப்பு கொண்டவர். உலகின் 500 இளம் பில்லியனர்களில் ஒருவராகத் திகழும் அகர்வால், இந்தியாவின் எலான் மஸ்க் என புகழப்படுகிறார்.
எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனமான ஓலா,2017ல் பெங்களூருவில் பவிஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சில எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், நிறுவனத்தினர் அதை மாற்றி புதிய பாதையில் முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில்,வாடகை கார்கள், ஸ்கூட்டர்கள், பேட்டரி உற்பத்தி, மற்றும் டேட்டா கிரியேஷன் போன்ற பல துறைகளில் ஓலா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.மேலும்,ஓலா IPO (Initial Public Offering) மூலம் பங்குச் சந்தையில் கால் தடத்தை பதித்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பதே IPO என்று அழைக்கப்படுகிறது.மேலும்,ஹூண்டாய்,டாடா போன்ற நிறுவனங்கள் IPO மூலம் மாபெரும் வெற்றியை கண்டுள்ள நிலையில், ஓலா-வும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.பங்குச் சந்தையில் ஒரு ஷேருக்கு ரூ.76 என்ற விலையில் தொடங்கிய ஓலா,தற்பொழுது,18 சதவீதம் வரை உயர்ந்து விலையை தொட்டுள்ளது.
இதனால், முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் பெற்றுள்ளதால், பவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்தது. இதற்கு முன்பு 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்த அவரது சொத்து, தற்பொழுது, 2.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.இந்நிலையில்,இந்த தகவல் Bloomberg Billionaires என்ற வலைத்தளம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொழிலை தொடங்கிய பவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு தற்போது ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் இவரை, இந்தியாவின் எலான் மஸ்க் என சிங்கப்பூரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் நிதின் பங்கார்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.