Ola Electric Scooty Price -இந்தியாவில் பிரபலமான ஓலா எலக்ட்ரிக், தனது S1 X மாடலுக்கு திடீர் விலை குறைப்பை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.மேலும் விவரங்களுக்கு கீழே படியுங்கள்.
இந்தியாவில் பிரபலமாக உள்ள, ஓலா எலக்ட்ரிக், தனது S1 X மாடலுக்கு திடீரென விலை குறைப்பை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திறமையான வாகனங்களை உருவாக்குவதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஓலா, புதிய சலுகையுடன் முன்வந்துள்ளது.
S1 X ஸ்கூட்டர், 95 கிலோமீட்டர் ரேஞ்ச் மற்றும் மணிக்கு 85 கிமீ வேகம் உடைய புதிய மாடலாக அறிமுகமாகிறது. இந்த ஸ்கூட்டர், நகரப் பயணங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முந்தைய விலை ரூ. 70,000 இருந்த S1 X மாடல், தற்போது ரூ. 49,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற சிறப்பான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 20,000 குறைப்பு 2 கிலோவாட் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், இந்த சிறப்பு விலை ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,எலக்ட்ரிக் வாகனங்கள், காற்று மாசுபாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக இருகின்றன. S1 X மாடல் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு எனவும், பயணத்திற்காக எளிதான மற்றும் குளிர்ந்த சூழலுடன் சுற்றுப்புறத்தை பாதுகாக்க உதவுகிறது.