Nostrum Fashion Net Worth - ரூ 5 லட்சம் கடனில் ஆரம்பித்த தனது சிறிய நிறுவனம் மூலம் இன்று பல கோடிகள் வருவாய் ஈட்டி வருகிறார் ராஜ் நவ்னி. "Sorry Madam" என்ற பெயரில் ஆரம்பித்த ஆயத்த ஆடைகள் கடை, தற்போது "Nostrum" என்ற பிராண்டாக பிரபலமாகி, ஆண்டுக்கு ரூ 150 கோடி வருவாயுடன் வளர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ் நவ்னி, ரூ 5 லட்சம் கடனில் தொடங்கி, இன்று பல கோடிகளை வருவாய் ஈட்டி வரும் நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். 1995ல் "Sorry Madam" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆயத்த ஆடைகள் கடை, தற்போது "Nostrum" என்ற பிராண்டாக மாறி, ஆண்டுக்கு ரூ 150 கோடி வருவாயைக் குவிக்கிறது.
ராஜ், உயிரியலில் பட்டம் பெற்ற பிறகு 23வது வயதில் வணிக உலகுக்கு அறிமுகமானார். தனது தந்தையின் ஜவுளிக்கடையில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி, குறுகிய காலத்தில் தனது கடையை பிரபலமாக்கினார்.
இன்று Nostrum Fashion Private Limited, 2023-2024 நிதியாண்டில் 150 கோடி வருவாயைக் குவிக்கவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ 500 கோடி வருவாயையும் இலக்காகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது 250க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், 1500 வணிக வளாகங்களில் Nostrum பிராண்டு விற்பனைக்கு உள்ளது.