• India
```

இனிமேல் OTT தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு...டிஜிட்டல் தளங்களுக்கு மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற முடிவு...!

OTT New Rules In India

By Ramesh

Published on:  2025-02-22 23:14:33  |    25

New Regulations For OTT - மத்திய அரசு OTT தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க சட்டம் இயற்ற முடிவெடுத்து இருக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு காலக்கட்டத்தில் சினிமா என்றால் தியேட்டர் கலாச்சாரம் மட்டுமே இருந்து வந்தது, அதற்கு பின்னர் படிப்படியாக டிவி கலாச்சாரம் வந்தது, பின்னர் கேபிள்கள், டிவிடிகள் என படிப்படியாக முன்னேறி தற்போது OTT கலாச்சாரத்தில் வந்து நிற்கிறது, ஆனால் சினிமா என்பதற்கு தணிக்கை குழு இருப்பது போல இந்த OTT களுக்கு எந்த ஒரு தணிக்கை குழுவும் இல்லை.

இதனால் OTT யில் படம் எடுக்கும் இயக்குநர்கள், ஏற்கனவே சினிமாவில் தவிர்க்கப்பட்ட காட்சிகள், ஆபாசங்கள், வன்முறைகள் என அனைத்தும் தற்போது OTT களில் நார்மலைச் ஆகி விட்டது, இத்தகைய OTT படங்களில் காட்டப்படும் வன்முறைகளும், ஆபாசங்களும் மனிதர்களுக்குள் ஊடுருவி, அது சமூகத்திலும் பிரதிபலிப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.



பல சமூக ஆர்வலர்களும் சினிமாவிற்கு தணிக்கை குழு இருப்பது போல OTT தளங்களுக்கும் அமைக்கப்பட வேண்டும், இல்லையேல் OTT தளங்கள் வரம்பு மீறி செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது என கோரிக்கை விடுத்து வந்தனர், தற்போது மத்திய அரசும் அதற்கு செவி சாய்த்து இருக்கிறது, OTT சுதந்திரமான தளமாக இருப்பதால் அதை ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விடுகின்றனர்.

இதனால் OTT மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது, இதற்காக தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டு OTT யின் சாதக பாதகங்கள் தீர்மானிக்கப்பட்டு OTT க்கென தனியாக சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது, இதனால் OTT சுதந்திரம் பறி போகும் சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.