• India
```

ஹாலிவுட்டிற்கு சவால் விடும்...சீன அனிமேஷன் திரைப்படம்...20 நாளில் ரூ 15000 கோடி வரை வசூல்...!

Ne Zha 2 Box Office

By Ramesh

Published on:  2025-02-21 09:02:22  |    266

Box Office Performance of Ne Zha 2 Film - சீன அனிமேஷன் திரைப்படம் ஒன்று 20 நாளில் ரூ 15,000 கோடி வசூல் செய்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறது.

பொதுவாக பாக்ஸ் ஆபிஸ் என்றாலே நியாபகத்திற்கு வருவது ஹாலிவுட் திரைப்படங்கள் தான், இந்திய திரைப்படங்களில் ஒன்றிரண்டு தான் 2000 கோடி அளவிலான வசூலை நெருங்கி இருக்கின்றன, தற்போதைய பான் இந்தியா கலாச்சார படங்களுக்கு உலகளாவிய அளவில் நல்ல மவுசு இருக்கிறது, சமீபத்தில் மஹாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகி 100 கோடி வசூலை தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சினிமா என்பதற்கு சர்வதேச அளவில் எப்போதுமே ஒரு நல்ல வெளிச்சம் இருக்கிறது, ஒரு நல்ல சினிமா எப்படியேனும் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்பதை இப்போதெல்லாம் படைப்பாளர்கள் உணர்ந்து இருக்கின்றனர், அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்பட்டு வெளியான ஒரு அனிமேசன் திரைப்படம் உலகளாவிய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



ஒரு நிஜ ஹீரோவை எப்படி போற்றிக் கொண்டாடுவார்களோ அது போல அனிமேசன் ஹீரோக்களையும் ரசிகர்கள் தற்போது வெகுவாக ரசித்து வருகின்றனர், அந்த வகையில் இயக்குநர் ஜியா ழி அவர்கள் இயக்கிய நே ழா 2 என்ற சீன அனிமேசன் திரைப்படம் உலகளாவிய அளவில் 15,000 கோடி வசூலை அள்ளி வசூலில் புதிய சாதனை ஒன்றை புரிந்து இருக்கிறது.

ஹாலிவுட் படங்கள் 10 ஹீரோவை வைத்து இயக்கி புரிந்த வசூல் சாதனைகளை எல்லாம் சீனாவின் ஒரு அனிமேசன் திரைப்படம் தூள் தூளாக்கி உலகளாவிய அளவில் அதிக வசூல் செய்த படமாக முன்னேறி இருக்கிறது, அதுவும் இந்த வசூல் சாதனையை இந்த சீன அனிமேசன் திரைப்படம் 20 நாட்களில் நிகழ்த்தி இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.