• India
```

லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் விக்னேஷ் சிவனின் புதிய முதலீடு..Ticket9 யூனிகார்ன் நிறுவனமாக வளர்ச்சி !

Nayanthara Vignesh Shivan New Investment | Nayanthara Vignesh Startup

Nayanthara Vignesh Shivan New Investment - நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன், கோவை நகரில் உள்ள Ticket9 என்ற நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ், தொழில்களில் புதிய பாதைகளை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன், இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய பிசினஸ் வாய்ப்புகளில் முதலீடு செய்துள்ளனர். தற்போது, பல நடிகைகள் உணவு மற்றும் ஆடைத் தொழில்களில் ஈடுபடுவதோடு, இவர்கள் தங்கள் முதலீட்டில் புதிய மொழி சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ஃபெமி 9 (Femi 9) என்ற நாப்கின் பிசினஸ் மற்றும் 9 ஸ்கின் (9 Skin) என்ற ஸ்கின்கேர் பிராண்டை தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், கோவை நிகழ்ச்சி திட்டமிடல் ஸ்டார்ட் அப் Ticket9-ல் இவர்களது முதலீட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில்,Ticket9 நிறுவனத்தின் தலைமை, "இவர்களின் முதலீடு எங்கள் நிறுவனத்தின் மைல்கல். அவர்களின் நம்பிக்கை, எங்களை அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வலுப்படுத்துகிறது," என்று கூறியுள்ளனர். மேலும், Ticket9 நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், விக்னேஷ் சிவன் கூறியுள்ளார், Ticket9 நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் துடிப்பாக செயல்படுகிறது, இது யூனிகார்ன் நிறுவனமாக வளரும் என்ற நம்பிக்கை அதிகமாகஇருக்கிறது .