• India

வாரத்திற்கு 70 மணி நேர வேலை தான் சரி...இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் திட்டவட்டம்...!

Narayana Murthy 70 Hours Work Week

By Ramesh

Published on:  2024-12-17 04:11:09  |    74

70 Hours Work Week - பொதுவாகவே இந்திய ஊழியர்களிடம் ஒரு மனப்பாங்கு இருக்கிறது, அதாவது இந்தியாவில் ஊழியர்களுக்கான வேலை நேரம் என்பது அதிகமாக இருக்கிறது என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது, சமீபத்தில் பிரபல நிறுவனம் ஒன்று ’அதிக வேலைநேரம் கொண்ட நாடுகள் எது’ என்ற பெயரில் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியா அப்படியலில் முதலிடத்தில் இருக்கிறது.

அதாவது இந்தியாவின் சராசரியான வார வேலை நேரம் என்பது கிட்டதட்ட 55 மணி நேரமாக இருக்கிறது, இதையே ஊழியர்கள் அதிகம் என்று நினைக்கும் போது, இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் ஊழியர்கள் பணி புரிய வேண்டும் அது தான் ஒரு நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் நல்லது என தொடர்ந்து வலியுருத்தி வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.



பொதுவாக ஊழியர்கள் நாராயணமூர்த்தி அவர்களின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் போது எல்லாம் சொல்வது, கனடா, ஸ்விஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் 4 முதல் 6 மணி நேரம் தான் வேலை நேரம் என்பதை குறிப்பிட்டு காட்டுகிறார்கள், இது குறித்தும் நாராயணமூர்த்தி அவர்கள் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்கள்,

அதாவது அந்த நாட்டின் பொருளாதார நிலைமைக்கும், அந்த நாட்டின் மக்கள் தொகைக்கும் அந்த உழைப்பு போதுமானதாக இருக்கும், ஆனால் இந்தியாவின் பொருளாதார நிலையும், மக்கள் தொகையும் அந்த நாடுகளை போல அல்ல, நாம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது, இங்கு 800 மில்லியன் மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள், அவர்களின் நிலை மாறுவது என்பது உழைப்பில் மட்டுமே இருக்கிறது,



ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலதிபர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், அவர்கள் பலருக்கும் வேலை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள், பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பது மட்டும் அல்லாது, தேசத்தின் பொருளாதாரத்தையும் நிலையாக வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில் ஊழியர்களுக்கும் தேசத்தின் பொருளாதாரத்திற்கும் ஒரு நிலையான தொடர்பு இருக்கிறது.

இது ஓய்வுக்கான நேரமே அல்ல, ஊழியர்கள் உழைத்தால் அவர்களும் உயர்வார்கள், நிறுவனமும் வளரும், தேசமும் வளரும், பொருளாதாரமும் வளரும், நாம் குறிப்பிட்டு காட்டுகின்ற நாடுகளை போல வளருவதற்கு இன்னும் வருடங்கள் ஆகலாம், சீனா நம்மை விட 3.5 மடங்கு உற்பத்தையை கொண்டு இருக்கிறது, அந்த வகையில் நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

" அந்த நாடுகளை போல நாமும் வளர்ந்த நாடுகளாக மாறிய பின் வேண்டுமானால், இந்த வேலை நேர குறைப்பை பற்றி யோசிக்கலாம், ஆனால் நிச்சயம் வார வேலை நேரம் 70 மணி நேரம் என்ற கருத்தில் இப்போதைக்கு மாற்றம் இல்லை, என நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்து இருக்கிறார் "