Namita Thapar Disagrees With 70 Hours Work Week - பொதுவாகவே இந்திய ஊழியர்களிடம் ஒரு மனப்பாங்கு இருக்கிறது, அதாவது இந்தியாவில் ஊழியர்களுக்கான வார வேலை நேரம் என்பது அதிகமாக இருக்கிறது என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது, சமீபத்தில் பிரபல நிறுவனம் ஒன்று ’அதிக வேலைநேரம் கொண்ட நாடுகள் எது’ என்ற பெயரில் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியா அப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
அதாவது இந்தியர்களின் சராசரியான வார வேலை நேரம் என்பது கிட்டதட்ட 55 மணி நேரமாக இருக்கிறது, இதையே ஊழியர்கள் அதிகம் என்று நினைக்கும் போது, இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் ஊழியர்கள் பணி புரிய வேண்டும் அது தான் ஒரு நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் நல்லது என தொடர்ந்து வலியுருத்தி வருவதற்கு தற்போது எதிர்வினைகள் ஆரம்பித்து இருக்கிறது.
ஊழியர்கள் மட்டும் அல்லாது, Zoho, EMCURE போன்ற பிரபல கம்பெனிகளின் தலைமைகளும் இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்களின் கருத்துக்கு எதிராக எதிர்வினை ஆற்றி வருகின்றனர், EMCURE பாராமெச்சுட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி நமீதா தாபர் ஒருபடி மேலே சென்று 70 மணி நேர வார வேலை என்பதை கொஞ்சம் கடுமையாகவே சாடி இருக்கிறார்.
அதாவது 'பணத்தை டன் கணக்கில் சம்பளமாக வாங்குபவர்கள் வேண்டுமானால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 70 மணி நேரம் வேலை செய்யட்டும், சட்டையின் மேல் பை கூட நிரம்பாத அளவிற்கு சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ஏன் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என நமீதா தாபர் எழுப்பிய கேள்வி தான் தற்போது இணையத்தில் வைரல்.