Nagapattinam To Sri Lanka Ferry Service Update - சுபம் என்னும் கப்பல் போக்குவரத்து நிறுவனம், நாகை துறைமுகம் முதல் யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் வரை ஒரு பயணிகள் போக்குவரத்து கப்பலை அறிமுகப்படுத்தி இருந்தது, அந்த போக்குவரத்து கப்பல், இலங்கை மற்றும் இந்திய சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் சில நாட்களாக அந்த கப்பல் போக்குவரத்து செயல்படாமல் போனது.
அதாவது பெஞ்சல் புயல் மற்றும் கால நிலை மாற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பருவ கால மாற்றம் சீரடைந்ததால், வருகின்ற ஜனவரி 2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த ஆய்வுகள் வழித்தடங்கள் முழுக்க செயல்படுத்தப்பட்ட பின் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக சுபம் நிறுவனம் தகவல் விடுத்து இருக்கிறது.
இது போக இலங்கை சென்று மீண்டும் இந்தியா திரும்புவதற்கான டிக்கெட் விலை ரூ 9,200 (இந்திய மதிப்பில்) என நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ரூ 700 வீதம் குறைக்கப்பட்டு, Two Way டிக்கெட் ரூ 8,500 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது, லக்கேஜை பொறுத்தமட்டில் ஒரு நபர் 60 கிலோ வரை எடுத்துச் செல்லலாம், ஆனால் 10 கிலோ வரையில் மட்டுமே விலையில்லாமல் அனுமதிக்கப்பட்டும்.
இது போக Sail Subham நிறுவனம் மூன்று நாள் சுற்றுலா பேக்கேஜ்கள், ஆறு நாள் ஆன்மீக சுற்றுலா பேக்கேஜ்கள் உள்ளிட்டவைகளையும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி இருக்கின்றன, கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த இந்த அதிரடி ஆபர்களை வழங்கி வருவதாக சுபம் நிறுவத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரராஜன் கூறி இருக்கிறார்.
" டிக்கெட் புக் செய்வதற்கும், சுற்றுலா குறித்த பேக்கேஜ்களை அறிவதற்கும் https://booking.sailsubham.com/home என்ற இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது, ஏஜென்சிகள் மூலம் புக் செய்யாமல், பயணிகள் நேரிடையாகவே இத்தளத்தின் மூலம் புக் செய்ய முடியும் "