Unknown Deadly Illness Strikes Western Congo - ஆப்பிரிக்காவில் புதிய வைரஸ் தொற்று ஒன்று வேகமாக பரவி வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகம் கொரோனோ என்னும் வைரஸ்சால் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இந்த வேளையில், ஆங்காங்கே புதிய தொற்றுகள் என்பதும் உலக நாடுகளை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது, ஏற்கனவே கொரோனோவின் புதிட மாற்றுரு வைரஸ் ஒன்று சீனவை அச்சுருத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது ஆப்பிரிக்காவின் மேற்கு காங்கோவில் புதிய வைரஸ் தொற்று ஒன்று மக்களை பெரிதும் அச்சுருத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் விடுத்து இருக்கிறது, அதாவது இந்த புதிய தொற்றால் இதுவரை 53 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் 431 பேருக்கு இந்த தொற்று என்பது உறுதியாகி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்து இருக்கிறது.
மேலும் இந்த தொற்று ஒருவருக்குள் பரவி 48 மணி நேரத்தில் இறப்பை ஏற்படுத்துவதாகவும், பரவல் முறையும் வேகமாக இருப்பதாகவும், பாதித்தவர்களுக்கு உடனடியாக நோய் தீவிரங்களை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர், சரி இது எப்படி பரவியது என்பது குறித்து உள்ளூர் நிர்வாகம் விசாரித்த போது முதலில் மூன்று சிறுவர்களுக்கு தான் இந்த நோய் பரவல் கண்டு பிடித்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் இந்த நோய்ப்பரவலுக்கு முன்னதாக வவ்வாலை சுட்டு சாப்பிட்டதாக தெரிகிறது, ஆதலால் இந்த நோய்ப்பரவலுக்கு வவ்வால் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது, நோய்ப்பரவலின் தீவிரத்தை முறியடிக்க ஆப்பிரிக்க சுகாதார அமைப்பு, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, நோய்ப்பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.