Metro Length In India - இந்தியாவின் ஒட்டு மொத்த மெட்ரோ ரயில்வே நெட்வொர்க் ஆனது கிட்டதட்ட ஆயிரம் கிலோ மீட்டரை நெருங்க இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருக்கிறது, பெருநகரங்களில் மெட்ரோ என்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும், முக்கியமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்கள் மெட்ரோவால் பெரும் பயனை அடைந்து இருக்கின்றன.
அதாவது மெட்ரோ அமைக்கப்பட்டு இருக்கும் பெரு நகரங்களில் எல்லாம், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து இருப்பதாக தகவல், இது போக நெடுஞ்சாலைகளில் கார்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருக்கிறது, இது ஒரு பசுமை மாற்றத்தை நோக்கி செல்லும் நிகழ்வாக மட்டும் அல்லாது சாலைகளில் நெரிசல்களை மெட்ரோவால் தவிர்க்க முடிகிறது.
நீண்ட மெட்ரோ நெட்வொர்க் கொண்ட பெருநகரங்களை பொறுத்தமட்டில், டெல்லி 435 கி.மீ அளவிலான மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க்கை கொண்டு இயங்கி வருகிறது, அதற்கு அடுத்தபடியாக மும்பை 90 கி.மீ அளவிலான மெட்ரோ நெட்வொர்க்கை கொண்டும், பெங்களுரு 77 கி.மீ அளவிலான மெட்ரோ நெட்வொர்க்கை கொண்டும், ஹைதராபாத் 69 கி.மீ அளவிலான மெட்ரோ நெட்வொர்க்கை கொண்டும் இயங்கி வருகின்றன.
இதில் சென்னை 54 கி.மீ அளவிலான மெட்ரோ நெட்வொர்க்கை கொண்டு அந்த பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கிறது, சென்னையில் தற்போது மெட்ரோவிற்கான இரண்டாம் கட்ட பணிகள் நடை பெற்று கொண்டு இருப்பதால் இப்பட்டியலில் சென்னை இன்னும் உயர வாய்ப்பு இருக்கிறது, தற்போது இந்தியாவின் ஒட்டு மொத்த மெட்ரோ நெட்வொர்க்கின் நீளம் 993 கி.மீ ஆக இருக்கிறது.