• India
```

ரிப்பேருக்கு ரூ 90000 கேட்ட Ola நிறுவனம்...வாங்கி ஒரு மாதமே ஆன பைக்கை...அடித்து துவம்சம் செய்த வாடிக்கையாளர்...!

Man Smashed His Ola Bike In front Of Ola Showroom

By Ramesh

Published on:  2024-11-25 18:01:48  |    297

Man Smashed His Ola Bike In front Of Ola Showroom - வாங்கி ஒரு மாதமே ஆன பைக்கை ரிப்பேர் செய்வதற்கு ரூ 90,000 கேட்டதால், ஆத்திரம் அடைந்த Ola வாடிக்கையாளர், பைக்கை ஷோரூமின் முன்பாகவே அடித்து துவைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Man Smashed His Ola Bike In front Of Ola Showroom  - பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Ola Electric நிறுவனம் இந்தியாவின் முன்னனி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பாளராக விளங்கி வருகிறது, வேறு எந்த வாகனங்களிலும் இல்லாத புதுமை புதுமையான அம்சங்களை Ola தனது மின்சார பைக்குகளில் கொண்டு வந்து விற்பனை பெருக்கி வந்தாலும், பைக்கிற்கு ஏதும் பிரச்சினை என்றால் சர்வீஸ் செய்வதில் ஆயிரம் குறைகளை வைத்து இருக்கிறது.

ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அதை தீர்க்க முடியாமல் Ola Service சென்டர்கள் 20 முதல் 30 நாட்கள் வரை இழுத்து அடிப்பதாக பலரும் முன்மொழிந்து வருகின்றனர், பல விளம்பரங்களை காட்டி விற்பனையை பெருக்கும் Ola, விற்பனைக்கு பின்னதான பிரச்சினைகளை கண்டு கொள்வதே இல்லை என்பது தான், Ola வாங்கிய வாடிக்கையாளர்களின் பலரது புகார்களாக இருக்கிறது.



இந்த நிலையில் டெல்லியை சார்ந்த ஒருவர் ஒரு மாதங்களுக்கு முன்பு Ola Show ரூமில் ஒரு பைக் எடுத்து இருக்கிறார், திடீரென்று ஒரு ரிப்பேர் வந்து இருக்கிறது, ரிப்பேருக்காக பைக்கை ஷோ ரூமில் விட்டுச் சென்று இருக்கிறார், ரிப்பேருக்கு 15 நாட்கல் எடுத்துக் கொண்ட ஷோ ரூம், அது மட்டும் அல்லாமல் எடுத்து ஒரு மாதமே ஆன பைக்கிற்கு ரூ 90,000 பில்லை போட்டு இருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் ஒரு சுத்தியலை எடுத்து ஷோ ரூம் முன்பாகவே பைக்கை அடுத்து நொறுக்கி தனது ஆத்திரத்தை தீர்த்து கொண்டு இருக்கிறார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே நுகர்வோர் குறை தீர்ப்பு மையம் இது குறித்து விசாரிக்க முடிவெடுத்து இருக்கிறது, கடந்த சில நாட்களாகவே Ola மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.