MahaKumbh Mela Quirks - அலகாபாத் பிரயாக்ராஜில் அரங்கேறி வரும் மகா கும்பமேளாவில் பல விநோதமான தொழில் விநோதங்கள் அரங்கேறி வருகிறது அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக மகா கும்பமேளா என்பது அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிம் உள்ளிட்ட நான்கு இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெறும், அந்த வகையில் தற்போதைய மகா கும்பமேளா என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமம் ஆகும் அலகாபாத் (பிரயாக்ராஜ்) நகரில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த மகா கும்பமேளா ஒரு ஆன்மிக தளம் ஆக மட்டும் இல்லாமல், பலர் தொழிலை உருவாக்கி கொள்ளும் ஒரு சூழலாகவும் தற்போது மாறி இருக்கிறது, பல கோடி மக்கள் கூடும் இடம் என்பதால் இங்கு என்ன தொழில் செய்தாலும் க்ளிக் ஆகி விடுகிறது, அந்த வகையில் இந்த மகா கும்ப மேளாவில் பல தொழில் விநோதங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.
ஒருவர் வெறும் ஆலம் வேர் மட்டும் விற்பனை செய்து ரூ 50,000 வரை வருமானம் பார்த்து இருக்கிறாராம், ஒருவர் சார்ஜ் போடுவதற்கு என்று தனியாக ஸ்டேசன் வைத்து ஒரு சார்ஜுக்கு 50 ரூபாய் வரை வசூலித்து தினசரி 5000 ரூபாய் வரை வருமானம் பார்க்கிறாராம், 3000 கோடிகளுக்கு அதிபதி ஆன ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஆன்மீகத்திற்கு திரும்பி இருக்கிறார்.
முக்கியமாக பாசி, ருத்ராட்சம் விற்ற மோனலிசா என்ற பெண் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்ட் ஆகி தற்போது ஒரு கேரளாவில் ஒரு நகைக்கடையை திறந்து வைக்கும் அளவிற்கு பிரபலம் ஆகி இருக்கிறார், படங்களில் வேறு நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று இருக்கிறதாம், மொத்தமாக இந்த கும்பமேளா ஆன்மீகத்துக்கு மட்டும் வழி வகுக்காமல் பல தொழில் விநோதங்களுக்கும் வழி வகுத்து இருக்கிறது.