12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா. மேலும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 12 பூரண கும்பமேளாக்கள் முடிந்ததை குறிக்கும் வகையில் மகா கும்பமேளா நடத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா. மேலும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 12 பூரண கும்பமேளாக்கள் முடிந்ததை குறிக்கும் வகையில் மகா கும்பமேளா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெறும் மகா கும்பமேளா 45 நாட்கள் தொடரும் நிகழ்வாக, ஜனவரி 12 முதல் பிப்ரவரி 26 (மகாசிவராத்திரி) வரை நடைபெறுகிறது. சுமார் 40 கோடி பக்தர்கள் இந்த புனித நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ள நிலையில், தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர். பலகோட்டி பக்தர்கள் தங்கிய கூடாரங்கள் தீயில் கருகியதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் மகா கும்பமேளாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதிகாரிகள் தீ விபத்தின் பின்னணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.