Madurai Airport To Operate Entire Day - இனி மதுரையில் இருந்து இரவு நேரங்களிலும் விமானம் இயக்கப்படும் எனவும், 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் இயங்கும் வகையிலும் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Madurai Airport To Operate Entire Day - மதுரை விமானநிலையம் ஆனது 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, கிட்டதட்ட 67 வருடங்களாக செயல்பட்டு வரும் மதுரை விமான நிலையத்துக்கு 2014 ஆம் ஆண்டு 9001:2015 என்ற தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி விமான நிலையங்களை அடுத்து தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய விமான நிலையமாக மதுரை அறியப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 32 ஆவது பிசியான ஏர்போர்ட்டாக அறியப்பட்டு வரும் மதுரை விமான நிலையம், 67 வருடங்களாக செயல்பட்டு வந்தாலும் கூட, இன்னமும் சர்வதேச அந்தஸ்து என்பது மதுரை விமான நிலையத்திற்கு கிடைக்கவில்லை, மாதத்திற்கு கிட்டதட்ட இலட்சம் பயணிகளை கையாளும் மதுரை விமான நிலையம் கொழும்பு, துபாய், சிங்கப்பூர் என்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை, பெங்களுரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் உள்நாட்டு விமான சேவையை வழங்கி வருகிறது மதுரை விமான நிலையம், வாரத்திற்கு கிட்டதட்ட 248 விமானங்களை கையாண்டு வரும் மதுரை விமான நிலையம் இனி 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இதனால் இரவு நேர விமானங்களையும் இனி மதுரை கையாள இருப்பதாக தகவல்.
தென் தமிழக மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு சிறந்த விமான சேவை மையமாக செயல்பட்டு வரும் மதுரை விமான நிலையம், வருகின்ற டிசம்பர் 20 முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்ற அறிவிப்பிற்கு பயனர்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர், கூடிய விரைவில் சர்வதேச அந்தஸ்தும் கிடைத்தால் தென் தமிழக மக்களுக்கு அது பெரும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.