• India
```

பெஞ்சல் புயலால் பாதிக்கபட்ட வணிகர்களுக்கு...கூட்டுறவு வங்கிகளின் மூலம் சிறு வணிக கடன்...!

Loan Scheme For Fengal Affected Vendors

By Ramesh

Published on:  2024-12-06 16:48:11  |    287

Loan Scheme For Fengal Affected Vendors - தமிழக அரசு பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு சிறு வணிக கடன் வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Loan Scheme For Fengal Affected Vendors - யாரும் எதிர்பார்க்காத வகையில் பெஞ்சல் புயல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் சென்னையின் சில பகுதிகளில் அதீத மழையை தந்ததன் விளைவு கிட்டதட்ட இலட்சக்கணக்கான மக்கள் பொருளாதார இழப்பை சந்தித்து இருக்கின்றனர். பலரும் பல வருட உழைப்புகளை ஒட்டு மொத்தமாக இழந்து மீண்டும் ஜீரோ என்ற நிலையை அடைந்து இருக்கின்றனர்.

பல வணிகர்களும், சாலையோர தொழிலாளர்களும், அமைப்பு சார தொழிலாளர்களும் மொத்தமாக தங்கள் பொருள்களை எல்லாம் இழந்து இருப்பதால் மீண்டும் தொழிலை எப்படி துவங்குவது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர், வீட்டு உபயோக பொருள்களும், கடையில் இருந்த பொருள்களும் மொத்தமாக வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டத்தால் அவர்கள் மீண்டும் மீள்வதில் பல சிக்கல்கள் இருக்கிறது.



இந்த சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு அத்தகைய வணிகர்களுக்கு சிறு வணிகக்கடன் வழங்கும் திட்டம் ஒன்றை பெஞ்சல் புயலால் பாதித்த அனைத்து பகுதிகளிலும் அறிமுகப்படுத்தி இருக்கிறது, இத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் சிறு குறு வணிகர்கள், தள்ளு வண்டி கடைக்காரர்கள், சிறிய ஹோட்டல்கள், சாலையோர தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைவரும் கடன் பெற முடியும், வணிகர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 6 முதல் டிசம்பர் 12 வரை அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும், அதன் கிளைகளிலும் கடன் பெற வழி வகை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்.