Latest News Update in Tamil -8 வயது சிறுமி ஒருவர் செய்த செயலால் டார்கெட் நிறுவனம் உலகளாவிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படி அந்த சிறுமி என்ன செய்தார் என்பதை இங்கு பார்க்கலாம்.
அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்திடம் இருந்து காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்து இருக்கிறது. அந்த அழைப்பில் ’தன்னுடைய மகளையும், தங்களுடைய காரையும் காணவில்லை’ என்று பதட்டத்துடன் ஒரு ஆண் பேசி இருக்கிறார். காவல் துறை இது குறித்து விசாரிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான தகவல் அவர்களுக்கு கிடைத்து இருக்கிறது.
கார் வீட்டில் இருந்து பதிமூன்று மைல்கள் தள்ளி டார்கெட் நிறுவனத்தின் பார்க்கிங்கில் நின்று இருக்கிறது. ஆனால் காருக்குள் அந்த சிறுமி இல்லை.
மாறாக டார்கெட் நிறுவனத்தில் இருக்கும் ஸ்டார் பக்ஸ்சில் ப்ஃராபசினோ எனப்படும் ஒரு ஐஸ்கீரிமை வாங்கி அவள் சாப்பிட்டு கொண்டு இருந்திருக்கிறாள் அதாவது அந்த 8 வயது சிறுமி ஒரு ஐஸ்கீரிமிற்காக, அவர்களது வீட்டில் பார்க் செய்யப்பட்டு இருந்த நிஸான் காரை எடுத்து அவரே அந்த காரையும் ஓட்டி, 13 மைல்கள் தனியாக பயணம் செய்து இருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வளவு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் 2 மணி நேரமாக யார் கண்ணிலும் படாமல் காரை ஓட்டி சென்று இருக்கிறாள் அந்த சிறுமி.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகவே, அந்த சிறுமி மட்டும் அல்லாது அந்த சிறுமி செய்த செயலால், கூடவே டார்கெட் நிறுவனமும், அந்த டார்கெட் நிறுவனத்தின் ப்ஃராபசினோவும் அமெரிக்க மார்க்கெட்டுகளில் அதிகம் தேடப்பட்டு வருகிறதாம்