L And T Chairman Advocates 90 Hours Work Week - பொதுவாகவே இந்திய ஊழியர்களிடம் ஒரு மனப்பாங்கு இருக்கிறது, அதாவது இந்தியாவில் ஊழியர்களுக்கான வேலை நேரம் என்பது அதிகமாக இருக்கிறது என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது, சமீபத்தில் பிரபல நிறுவனம் ஒன்று ’அதிக வேலைநேரம் கொண்ட நாடுகள் எது’ என்ற பெயரில் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியா அப்படியலில் முதலிடத்தில் இருக்கிறது.
அதாவது இந்தியாவின் சராசரியான வார வேலை நேரம் என்பது கிட்டதட்ட 55 மணி நேரமாக இருக்கிறது, இதையே ஊழியர்கள் அதிகம் என நினைக்கும் போது, இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் ஊழியர்கள் பணி புரிய வேண்டும் அது தான் ஒரு நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் நல்லது என தொடர்ந்து வலியுருத்தி வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
இந்த இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் இந்த கருத்துக்கே எதிர்ப்பு வலுத்தி வரும் நிலையில், புதியதாக L & T நிறுவனத்தின் தலைமை ஆன S N சுப்பிரமணியன், வாரத்திற்கு 90 மணி நேர வேலையை வலியுறுத்தி வருகிறார், அது மட்டும் அல்லாமல் ஞாயிற்றுக் கிழமையும் அலுவலகத்தில் வந்து வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
'மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள், ஞாயிற்றுக் கிழமையும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யலாம், நான் ஞாயிற்றுக் கிழமையும் தான் வேலை செய்கிறேன், உங்களையும் அவ்வாறு வேலை செய்ய என்னால் வைக்க முடிந்தால் நான் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன்', என L & T நிறுவனத்தின் தலைமை N S சுப்பிரமணியன் கூறி இருப்பது இணையங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.